ஜனவரி 1ஆம் தேதியான இன்று குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு வர வேண்டுமா..? அப்படினா இப்படி வழிபடுங்க..!!
ஒவ்வொரு வருடப்பிறப்பும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. வருடத்தின் முதல் நாள் என்ன செய்கிறோமோ அதை அந்த வருடம் முழுவதும் செய்வோம் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் பலரும் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை செய்வார்கள். முடிந்த அளவிற்கு நல்ல செயல்களில் ஈடுபடுவார்கள். இப்படி செய்வதோடு மட்டுமின்றி, குலதெய்வத்தின் அருளை முதல் நாளே நாம் பெற்றோம் என்றால் அந்தாண்டு முழுவதும் நமக்கு குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அல்லது எந்தவொரு நல்லது நடக்க வேண்டுமென்றாலும் அதற்கு குலதெய்வத்தின் அருள் கண்டிப்பாக இருக்க வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால்தான் மற்ற தெய்வ வழிபாட்டில் கிடைக்கக்கூடிய பலன்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். அப்படிப்பட்ட குலதெய்வத்தின் அருள் ஆண்டு முழுவதும் கிடைப்பதற்கு ஜனவரி 1ஆம் தேதியான இன்று ஏற்ற வேண்டிய தீபம் மற்றும் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய ஜனவரி 1ஆம் தேதியன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக் கூடிய சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்றிக் கொள்ளுங்கள். பிறகு எப்போதும் ஏற்றுவது போல் தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அதோடு சேர்த்து ஒரு சிறிய தாம்பாள தட்டில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை பரப்பி, அதன் மேல் ஒரு விளக்கை வைத்து சுத்தமான பசு நெய் ஊற்றி வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை ஏற்றும்போது, குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு ஏற்ற வேண்டும். குலதெய்வத்தின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாகவும் இந்த தீபத்தை ஏற்றலாம். மேலும், தங்களால் எந்த நெய்வேத்தியத்தை செய்ய முடியுமோ அதை செய்து வைக்கலாம். அப்படி எதுவுமே செய்ய முடியாது என்னும் பட்சத்தில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், பால், ஒரு டம்ளரில் தண்ணீர், கற்கண்டு, உலர் திராட்சைகள் இப்படி எதை வேண்டுமானாலும் நெய்வேத்தியமாக வைக்கலாம்.
பின்னர், ஓம் குலதெய்வமே வசி வசி என்னும் மந்திரத்தை 27 முறை குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். இந்நேரத்தில் குலதெய்வமே நம்மை தேடி நம் வீட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. அப்படி வருடத்தின் முதல் நாளே நம் வீட்டை தேடி வரக்கூடிய குலதெய்வம், அந்த வருடம் முழுவதும் நம் வீட்டில் இருப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது. இப்படி செய்வதால், குலதெய்வத்தின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் 2025ஆம் ஆண்டு உங்களுக்கு கிடைக்கும்.
Read More : ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவு..!! காலை உணவு ரொம்ப முக்கியம்..!! அதுவும் இப்படி சாப்பிடுங்க..!!