10 ஆயிரத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டு அவர் எப்படி வாழ்க்கை நடத்துவார்..? ஜீவனாம்சம் கோரிய வழக்கில் கோர்ட் உத்தரவு..!!
கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனைவி ஒருவர் தன்னுடைய கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். அப்போது, கீழமை நீதிமன்றம் விதித்த தொகை என்ன? என்று நீதிபதி கேட்டுள்ளார். அப்போது, மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்காத நிலையில், மகனுக்கு மட்டும் மாதம் ரூ.10,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் பதிலளித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, கணவரின் வருமானம் என்ன? என்று கேட்டார். அதற்கு மனைவியின் வழக்கறிஞர், 62,000 ரூபாய் என்று தெரிவித்தார். அதற்கு கணவரின் வழக்கறிஞர் அவரது மொத்த சம்பளம் ரூ.18,000 என்றும், வீட்டிற்கு எடுத்துச் செல்லும் தொகை ரூ. 12,000 மட்டும்தான்" என்று விளக்கினார். உடனே நீதிபதி, "12,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நபர், தன்னுடைய குழந்தை பராமரிப்பிற்கு ரூ.10,000 எப்படி வழங்க முடியும்.
10 ஆயிரத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டு, அவர் எப்படி வாழ்க்கை நடத்துவார்..? அது முடியாது. குழந்தை செலவுக்காக முக்கால்வாசி பணத்தையும் கொடுத்துவிட்டால், அந்த மனிதன் தன்னுடைய வாழ்க்கை செலவுகளை எப்படி நிர்வகிக்க முடியும்..? வேண்டுமென்றால், எதிர்காலத்தில் கணவனின் ஊதியம் உயர்ந்தால், மனைவி தனியாக ஜீவனாம்சம் கோரி விண்ணப்பிக்கலாம்" என்று உத்தரவிட்டுள்ளார்.
Read More : இரவு டின்னர்..!! அமலாபாலை படுக்கைக்கு அழைத்த மேனேஜர்..!! அடித்து துவைத்த பரபரப்பு சம்பவம்..!!