For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நீங்கள் யாரென்று அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரிய வேண்டுமா..? பிணத்தை எரிக்காமலும், புதைக்காமலும் பாதுகாக்கலாம்..!!

German startup is freezing dead bodies to revive them in future for ₹1.8 crore
04:28 PM Aug 07, 2024 IST | Chella
நீங்கள் யாரென்று அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தெரிய வேண்டுமா    பிணத்தை எரிக்காமலும்  புதைக்காமலும் பாதுகாக்கலாம்
Advertisement

பொதுவாக மனிதனுக்கு இறப்பு என்று வந்துவிட்டால் உடனே புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும். ஆனால், ஜெர்மனியை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இறந்த உடல்களை பாதுகாக்கும் ஒரு முறையை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால், அந்த உடலை புதைக்காமல் அல்லது எரிக்காமல் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருக்கும் வகையில் வழிவகை செய்கிறது.

Advertisement

உடல் முழுவதையும் பாதுகாக்க வேண்டுமென்றால், 1.8 கோடி ரூபாய் செலவாகும் என்றும் இறந்தவரின் மூளையை மட்டும் பாதுகாப்பதற்கு ரூ.67.20 லட்சம் செலவாகும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி செல்லப் பிராணிகளையும் பாதுகாத்து வைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இறந்தவரின் உடல்களை பெறும் இந்நிறுவனம், முதலில் திரவ நைட்ரஜனால் நிரப்பப்பட்ட ஒரு பெட்டியில் பாதுகாத்து வைக்கிறது.

பிறகு மைனஸ் 198 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் அந்த உடல் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் நமது முன்னோர்களின் உடலை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் இம்முறையில் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சிலர் இந்த நிறுவனத்தில் தங்களது முன்னோர்களை பாதுகாத்து வைக்க முன் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை உலகம் முழுவதும் ஒரு சில ஆண்டுகளில் பரவினால் இறந்தவர்களை புதைக்கவும், எரிக்கவும் செய்யாமல் பாதுகாப்பாக வைத்திருந்து நம் முன்னோர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அடுத்த தலைமுறையினருக்கு காண்பித்துக் கொள்ளலாம்.

Read More : தினமும் காலையில் அலாரம் வைத்து எழுபவரா நீங்கள்..? இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

Tags :
Advertisement