’ஹேப்பி எண்டிங் வேணுமா’..? மசாஜ் சென்டரில் மஜாவாக நடக்கும் விபச்சாரம்..!! இப்படித்தான் வலை விரிப்பார்கள்..!!
மதுரையில் 'ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தும் சிலர், சட்டவிரோதமாக பாலியல் தொழிலும் செய்து வருவது அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டம் கே.கே.நகர் லேக்வியூ ரோடு பகுதியில் 'துலாஸ்' ஸ்பா சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சோதனை செய்தபோது விபச்சாரம் நடப்பது உறுதியானது. இதில், மேலாளர் கோவை சரவணகுமார் (42) உட்பட இருவரை கைது செய்தனர். 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.
மதுரை வண்டியூர் தீபன் என்பவர் பெயரில் பெறப்பட்ட அனுமதியை அருண்குமார் என்பவர் இந்த 'ஸ்பா'வுக்காக பயன்படுத்தி வந்துள்ளார். அவரை தேடி வருகின்றனர். 'ஸ்பா' சென்டர்கள் பின்னணி 'மசாஜ் செய்வதும் தொழில்தான். எனவே உரிய நிபந்தனைகளுடன் 'ஸ்பா' சென்டர் நடத்தலாம்' என வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் 50 'ஸ்பா' சென்டர்கள் புற்றீசல் போல் உருவாகியுள்ளன. இதில் முறையாக அனுமதி பெற்றவை 7 மட்டுமே.
அதேபோல் மசாஜ் செய்பவர்கள் அதற்கான பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மதுரையில் மசாஜ் செய்யும் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெண்களில் பலருக்கு 'ஸ்பா' சென்டர் உரிமையாளர்கள் போலியாக சான்று தயாரித்து கொடுத்துள்ளனர். வாடிக்கையாளர்களை 'வளைப்பது' எப்படி 'ஸ்பா' சென்டருக்கான வெப்சைட், சமூகவலைத்தளத்தில் வரும் விளம்பரங்களில் இருந்து ஒருவர் தேடும்போது, அவரது அலைபேசி எண் சம்பந்தப்பட்ட சென்டரில் பதிவாகிவிடும். அங்கிருந்து பேசுபவர், என்னென்ன மசாஜ் எல்லாம் செய்வோம் எனக்கூறி கட்டண விவரத்தை தெரிவிப்பார்.
'அது உண்டா' எனக்கேட்டால் 'கிடையாது' என தெரிவித்துவிடுவர். 'போய்தான் பார்ப்போமே' என முதல் நாளில் புதுவாடிக்கையாளராக செல்லும்போது மசாஜ் மட்டுமே செய்து அனுப்பிவிடுவர். மறுமுறை அதே சென்டருக்கு செல்லும்போது, ஏற்கனவே வந்தவரா என உறுதி செய்ய போன் எண் கேட்பார்கள். அதை கம்ப்யூட்டரில் டைப் செய்யும்போது ஏற்கனவே வந்தவர் என காண்பித்தால், மசாஜ் செய்யும் பெண்களுக்கு வரவேற்பு அறையில் இருப்பவர் 'சிக்னல்' கொடுத்துவிடுவர்.
அறைக்கு செல்லும் போதும், மசாஜ் முடித்த பிறகு 'எக்ஸ்ட்ரா வேணுமா' என பாலியல் தொழிலுக்கான சங்கேத வார்த்தைகளை பெண் கூறுவார். சம்மதம் தெரிவித்தால் அந்த அறையிலேயே பாலியல் தொழில் நடந்துவிடும். அதற்குரிய 'எக்ஸ்ட்ரா' கட்டணத்தை பெண்ணுக்கு 'டிப்ஸ்' ஆக வாடிக்கையாளர் கொடுத்துவிடுவார். இதில், ஈடுபட்டுள்ள மதுரை பெண்களில் சிலர் ஏற்கனவே தனி வீடு, ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதானவர்கள். தற்போது இவர்கள் போலி சான்று பெற்று 'மசாஜ்' தொழில் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
தொழில் 'டல்' அடிக்கும்போது சலுகை என்ற பெயரில் பழைய கட்டணத்தில் மசாஜ் செய்யும் நேரத்தை கூடுதலாக அரைமணி நேரம் நீட்டித்து அழைப்பு விடுக்கிறார்கள். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களில் சிலர் பியூட்டி பார்லரில் வேலை பார்ப்பதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு செல்கின்றனர். குடும்ப வறுமை, கடன் பிரச்சனை போன்ற காரணங்களால் இத்தொழிலில் ஈடுபடுவதாக போலீசாரிடம் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.
Read More : இந்த பொருளின் விலை ஏன் இப்படி இருக்கு..? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா..?