Google Pay யூஸ் பண்றீங்களா..? ஆபத்து..!! உடனே Uninstall பண்ணுங்க..!! கூகுள் நிறுவனம் எச்சரிக்கை..!!
இந்திய மக்கள் கூகுள் பே-வை (Google Pay) அதிகம் நம்புவதற்கு காரணமே கூகுளின் செயற்கை நுண்ணறிவு மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பம் தான். இந்நிலையில், கூகுள் நிறுவனம், கூகுள் பே பயனர்கள் ஒருபோதும் செய்யவே கூடாத சில விஷயங்களை அதன் இணையதளம் மூலம் பகிர்ந்துள்ளது. அதில், கூகுள் பே செயலியில் பின் நம்பரை டைப் செய்யும் போதும், பரிவர்த்தனைகளை செய்யும் போதும் ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்களை பயன்படுத்தவே கூடாது.
இது உங்கள் சாதனத்தின் முழுமையான கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும். டெபிட் கார்டு, வங்கிக் கணக்கு விவரங்களை எடுத்துக்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, பிரபலமான சில ஸ்க்ரீன் ஷேரிங் ஆப்களான, ஸ்கிரீன் ஷேர், எனி டெஸ்க் மற்றும் டீம்வியூவர் போன்ற ஆப்களை கூறலாம். ஒருவேளை அவற்றை பதிவிறக்கம் செய்திருந்தால், கூகுள் பே ஆப்பை பயன்படுத்துவதற்கு முன், அவைகள் க்ளோஸ் செய்யப்பட்டு உள்ளதா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.
ஏதேனும் ஒரு லிங்க் வழியாக கூகுள் பே போன்ற ஆப்பை நீங்கள் இன்ஸ்டால் செய்து இருந்தால், அதை உடனே Uninstall செய்யவும். எப்போதுமே கூகுள் பிளே ஸ்டோர் வழியாக அதிகாரப்பூர்வமான ஆப்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.