முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பேப்பர் கப்பில் டீ, காஃபி குடிப்பது நல்லதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா..? ரொம்பவே ஆபத்து..!! கேன்சர் கூட வருமாம்..!!

If you drink 3 cups of tea a day in a plastic cup, 75,000 microplastic particles will enter your body.
02:59 PM Dec 10, 2024 IST | Chella
Advertisement

கடைகளில் தற்போது டீ, காஃபி குடிக்க வேண்டும் என்றால் பேப்பர் கப்பை அதிகம் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். டீ, காபி குடித்துவிட்டு கப்பை தூக்கி எறிந்துவிடுவது அடுத்தவர்கள் எச்சில் பட்ட டம்ளரில் சாப்பிடுவதை விட ஆரோக்கியமானது என்று கருதினாலும், பேப்பர் கப்பில் டீ குடிப்பது புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் என்று கூறுவது உண்மையா? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

பேப்பர் என்பது நுண்துளைகளால் உருவாக்கப்பட்டது. எனவே, இதில் டீ, காஃபி போன்ற திரவங்களை ஊற்றும்போது அப்படியே வெளியே வந்துவிடும். இதில் மொத்தம் 3 லேயர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். முன்பெல்லாம் பேப்பர் கப்பின் உள்ளே மெழுகு கோட்டிங் இருந்தது. இப்போதெல்லாம் அது செய்யப்படுவதில்லை. அதற்கு பதில் Polyethylene என்று சொல்லக்கூடிய அதே பிளாஸ்டிக்தான் மிகவும் மெல்லிய லேயராக கொடுக்கப்படுகிறது.

இதுவே கப்பில் இருந்து திரவம் வழிந்து வராமல் இருக்கவும், கப்பின் வடிவத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. பேப்பர் கப்களில் 15 நிமிடத்திற்கு மேலே சூடான திரவம் இருந்தால், எண்ணற்ற நுண் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் திரவத்தில் கலந்துவிடும். 100 ml சூடான திரவம் 15 நிமிடம் பிளாஸ்டிக் கப்பில் இருந்தால் 25,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்துவிடுகிறது. எனவே, ஒரு நாளைக்கு 3 கப் டீயை பிளாஸ்டிக் கப்பில் குடித்தால், 75,000 மைக்ரோ பிளாஸ்டிக் நுண் துகள்கள் உடலில் கலந்துவிடுமாம்.

இதைத் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் கேன்சர் போன்ற உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய நோய்கள் வரும் என்று கூறப்படுகிறது. எனவே, பேப்பர் கப்பில் தண்ணீர், ஜூஸ் குடிப்பது பிரச்சனையல்ல. ஆனால், சூடான பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

Read More : மீண்டும் ஆரோக்கிய உணவை நாடும் மக்கள்..!! 2024இல் அதிகம் சாப்பிட்ட உணவுகளின் பட்டியல் இதோ..!!

Tags :
ஆரோக்கியம்காஃபிபேப்பர் கப்
Advertisement
Next Article