For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உலக தலைவர்களை குழந்தையாக பார்த்துருக்கீங்களா..? அசத்திய AI..!! பிரதமர் மோடி முதல் புதின் வரை..!!

12:04 PM Apr 22, 2024 IST | Chella
உலக தலைவர்களை குழந்தையாக பார்த்துருக்கீங்களா    அசத்திய ai     பிரதமர் மோடி முதல் புதின் வரை
Advertisement

இன்றைய அதிநவீன விஞ்ஞான உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒரு கணினி மனிதனை போல யோசித்தால் அல்லது மனிதனை போல செயல்படுவதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. ஆனால், இந்த AI தொழில்நுட்பம் மனிதர்களை விட அதிக சக்தி வாய்ந்தது. இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய மனிதர்களால் கூட அவற்றால் என்னென்ன செய்ய முடியாது என்று கூறப்படுகிறது.

Advertisement

மேலும், இந்த தொழிநுட்பம் தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது மனிதர்கள் பார்த்து வரும் பல பணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பல ஊழியர்கள் தங்களது பணியையும் இழந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வரும்.

அந்த வகையில், தற்போது ஒரு AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட உலக தலைவர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரிடியூ உள்ளிட்ட பலர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : Gold | ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,800..? அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!

Advertisement