கவர்மெண்ட் நடத்துறியா..? கந்துவட்டி நடத்துறியா..? சேட்டை தானே இதெல்லாம்..!! மத்திய அரசை வறுத்தெடுத்த சீமான்..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”நீ கவர்மெண்ட் நடத்துறியா? கந்துவட்டி நடத்துறியா? என் வரியை எடுத்துக்கொண்டு மாதா மாதம் உனக்கு தருகிறேன் என்றால் உனக்கு வேலை என்ன? வேறு ஒரு வேலையும் மத்திய அரசுக்கு இல்லையா? எதற்கு வரியை வாங்கி பிரித்து தர வேண்டும்? அந்த வரியை வைத்து நிர்வாகம் செய்ய சொல்லலாமே? என் வரியை எடுத்துக்கொண்டு, அதை திரும்பி வாங்குவதற்கு நாங்கள் கெஞ்ச வேண்டுமா? மத்திய அரசு எதை வைத்து வருவாயைப் பெருக்குகிறது? சேட்டை தானே இதெல்லாம்.
எங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு பேரிடர் காலத்தில் நாங்கள் பிச்சை எடுக்க வேண்டுமா? மாநில அரசின் நிதியில்தான் மத்திய அரசு இயங்குகிறது. மத்திய அரசுக்கென்று தனி வருவாய் கிடையாது. வரியாகப் பெற்றதை விட கூடுதலாக நிதி கொடுத்திருப்பதாகக் கூறும் நிர்மலா சீதாராமன் நிதியை யாரிடம் எப்போது கொடுத்தார்? வரிக்காக, எங்கள் நிலத்தின் வளம் எல்லாவற்றையும் சுரண்டி, நாட்டை சுடுகாடாக்கி விடுவார்கள். மத்திய அரசில் இருந்து வரும் அமைச்சர்கள், சாலை ஓரத்தில் தட்டியை நட்டு, அதில் பாதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒட்டியிருப்பதை பார்வையிட்டுவிட்டுச் செல்கிறார்கள். அதற்கு, அங்கேயே இருந்துகொண்டு வாட்ஸ் அப்பில் அனுப்பச் சொல்லலாமே?
திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்துவைக்க வர முடிந்த பிரதமரால், வெள்ளத்தில் மிதந்து கிடந்த தூத்துக்குடிக்கு வர முடியவில்லை. விமான நிலைய விரிவாக்கம் யாருக்கானது? மக்கள் செத்துப்போன பிறகு அதை யார் பயன்படுத்துவது?" எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.