For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"அந்த நிலாவதான் கையில புடிச்சேன்" பாடல் நடிகையை ஞாபகம் இருக்கா..?

Musician Ilayaraja's song 'Andha Nilavathan Kaiyila Pudichen' is still popular today. Actress Ranjani became very famous in Tamil cinema in her first film with this one song
03:12 PM Jun 13, 2024 IST | Mari Thangam
 அந்த நிலாவதான் கையில புடிச்சேன்  பாடல் நடிகையை ஞாபகம் இருக்கா
Advertisement

1985 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘முதல் மரியாதை’. மலைச்சாமியாக சிவாஜியும், குயிலியாக ராதாவும் நடித்த முதல் மரியாதை படம் ரசிகர்களின் நெஞ்சங்களின் இன்றும் நிலைத்து நிற்க செய்துள்ளது.

Advertisement

இசைஞானி இளையராஜா இசையில் உருவான ‘அந்த நிலாவதான் கையில புடிச்சேன்’ பாடலுக்கு இன்றும் மவுசு அதிகம். இந்த ஒரு பாடலின் மூலம் நடித்த முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார் நடிகை ரஞ்சனி. சிங்கப்பூரிலிருந்து வந்தவர் என்றாலும் செவுலி கதாபாத்திரத்தில் ஒரு கிராமத்து மண்வாசனையுடன் கூடிய ஒரு பெண் எப்படி  இருப்பாரோ அதைப்போல எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்  ரஞ்சனி. படத்தில் இவரது நடிப்பும், ‘‘நிலவத்தான் கையில புடிச்சேன்..’’ பாடல் மூலம் இவருக்கு கிடைத்த புகழும் இவருக்கு மலையாள சினிமாவில் மோகன் லாலுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

மலையாளத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட், மேலும் மலையாள சினிமாவில் இவர் அறிமுகமான சுவாதி திருநாள் திரைப்படம் தேசிய விருதை பெற்றது. அதன் பின் இவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்படி பத்து ஆண்டு காலம் முன்னணி நடிகையாக இருந்த ரஞ்சனி அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.  அதன் பின் லண்டனை சேர்ந்த தொழிலதிபரை மணந்து அங்கு செட்டில் ஆகிவிட்டார். அவரின் லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read more ; செம குட் நியூஸ்..!! கூட்டுறவுத் துறையில் 13,12,717 பேரின் நகைக்கடன் தள்ளுபடி..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Tags :
Advertisement