For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடிக்கடி கை, கால்களில் வியர்வை வெளியேறுகிறதா..? வீட்டிலேயே இதை செய்து பாருங்கள்..!!

05:05 AM Apr 25, 2024 IST | Chella
அடிக்கடி கை  கால்களில் வியர்வை வெளியேறுகிறதா    வீட்டிலேயே இதை செய்து பாருங்கள்
Advertisement

நம்மில் பலருக்கு அடிக்கடி கை, கால்களில் வியர்வை வெளியேறும். நடக்கும்போது கால்களின் வியர்வை ஈரம் தரையில் படிவத்தை பார்த்திருப்பீர்கள். கைகளில் அதிகளவு வியர்க்கும்போது அவை ஒருவித துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் என்ற நோய். பயம், பதட்டம் ஏற்படும்போது கை, கால்களில் அதிகளவு வியர்கத் தொடங்கும். இவ்வாறு வெளியேறும் வியர்வையை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

Advertisement

* ஒரு கப் அளவு சர்க்கரை சேர்க்காத பிளாக் டீயை கொண்டு கை, கால்களை சுத்தம் செய்தால் வியர்வை வெளியேறுவதை கட்டுப்படுத்தலாம்.

* அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் ஊற்றி கை, கால்களை சுத்தம் செய்து வந்தால் வியர்வை பிரச்சனை சரியாகும்.

* ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து கை, கால்களை சுத்தம் செய்து வந்தால் இந்த பிரச்சனை சரியாகும்.

* ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 அல்லது 3 சூடத்தை தூள் செய்து கலந்து விட வேண்டும். பிறகு அதில், கால்களை 10 நிமிடங்களுக்கு ஊற வைத்தால் வியர்வை வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும்.

Read More : செம குட் நியூஸ்..!! இனி இவர்களுக்கும் உரிமைத்தொகை ரூ.1,000 கிடைக்கும்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Advertisement