உங்களுக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் இருக்கா..? அப்படினா வீட்டில் இருக்கும் இந்தப் பொருட்களே போதும்..!!
காரமான உணவை சாப்பிட்ட பின்னர் பலருக்கும் தொண்டை, உணவுக்குழல் பகுதியில் எரிச்சல் ஏற்படும். இதை நாம் நெஞ்செரிச்சல் என்கின்றோம். அமிலத்தன்மையால் ஏற்படும் இதை எவ்வாறு சரிசெய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். நமது வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் உள்ளன. அவை உணவை ஜீரணிக்க அமிலத்தை சுரக்கின்றன. ஒழுங்கற்ற உணவு அதிகப்படியான காரணமான உணவுகள். அதிகமான சாப்பாடு, சிற்றுண்டி, புகையிலை, மதுபானம், புகைப்பிடித்தல் ஆகியவை செரிமான அமைப்பை பாதிக்கின்றது. இது அமிலத்தன்மை ஏற்படுத்தி அதிகப்படியான அமில உற்பத்திக்கு வழிவகுக்கின்றது. எரியும் உணர்வுடன், வீக்கம், அடிக்கடி எரிதல், அஜீரணம் மற்றும் விழுங்கும்போது சிரமம் அல்லது வலி போன்றவை ஏற்படும். சரியாக கவனிக்கவில்லை என்றால் மோசமாகி பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இளநீர் : இளநீர் குளிர்ச்சியை அளிப்பதோடு எளிதில் ஜீரணமாகும் ஒரு பானம். பிஎச் அளவை இது சமநிலையில் வைக்கிறது. தேங்காய் நீர் அல்லது இளநீர் செரிமானத்தை தூண்டும். அமிலத்தன்மைக்கான சிறந்த இயற்கை தீர்வுகளில் ஒன்றாக செயல்படுகிறது. ஒரு டம்ளர் தேங்காய் நீரால் உடனடியாக நிவாரணம் பெறலாம்.
அதிமதுரம் : தலைமுறை தலைமுறையாக அசிடிட்டி விரட்டியாக பயன்படுத்தப்பட்டு வருவது அதிமதுரம். இனிப்பான சுவை குளிர்ச்சியாற்றல் உடலை குளிர்விக்கின்றது. அதிமதுரம் அமில சுரப்பை கட்டுப்படுத்துகிறது. செரிமானப்பாதையை பாதுகாக்கிறது. நெஞ்செரிச்சல் வயிற்றுவலி, அஜீரணம் மற்றும் குமட்டல் போன்ற அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை எளிதாக்குகின்றது. இது வயிற்றுப்புண்களைக் குணப்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது.
கற்றாழை : எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட அதிசய ஆயுர்வே மூலிகையாகும். குளிர்ச்சி தரும் ஒரு பொருள் கற்றாழை. பித்தத்தை சமன்படுத்துகின்றது. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தீர்க்கின்றது. கற்றாழை சாறு குடிப்பதால் அசிடிட்டி ஒழிகின்றது. வயிற்றில் அமிலம் சுரப்பதை கட்டுப்படுத்த உதவுகின்றது. முக்கியமானது இரைப்பை புண்களை இது குணப்படுத்துகின்றது.
புதினா : புதினா, மிகவும் முக்கியமான செரிமானத்திற்கு உதவும் இலை. புத்துணர்ச்சியூட்டும் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால், இது அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற உதவுகின்றது. அமிலத்தன்மை காரணமாக மார்பு அல்லது தொண்டையில் எரியும் உணர்வை புதினா டீ ஒரு கப் குடிப்பதால் தவிர்க்க முடியும்.
இஞ்சி : சிறந்த செரிமான மசாலா பொருட்களில்ஒன்று இஞ்சி. இது அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சனைகளுக்கான பல வீட்டு வைத்தியங்களில் ஒரு பகுதி. ஆயுர்வேதத்தின்படி புதிய இஞ்சி சுவையை தருகின்றது செரிமானத்தை ஊக்குவிக்கின்றத. குமட்டல் போன்ற அஜீரண கோளாறை சரிசெய்கின்றது.
Read More : 72 வயது முதியவருடன் லிவ் இன் வாழ்க்கை..!! நகை, பணத்தை வாரிக் கொடுத்ததால் கடைசியில் நடந்த பயங்கர சம்பவம்..!!