For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா..? உடனே சரிசெய்ய சுப்பர் டிப்ஸ்..!!

05:10 AM Apr 24, 2024 IST | Chella
உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா    உடனே சரிசெய்ய சுப்பர் டிப்ஸ்
Advertisement

தலைவலி சாதாரண ஒன்று என்றாலும் பின் மண்டையில் வலி ஏற்படுவது தொடர்ந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் சரி செய்து கொள்வது நல்லது. தலையின் பின் பக்கத்தில் வலி ஏற்பட்டால் அவை ஒரு வாரம் முழுவதும் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த வலி ஏற்பட்டால் தலை கணமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலையை அசைக்க முடியாமல் அசௌகரிய சூழல் உண்டாகும்.

Advertisement

தலையின் பின் மண்டையில் வலி ஏற்படக் காரணங்கள் :

1)மன அழுத்தம்
2)முறையற்ற தூக்கம்
3)உடல் சோர்வு
4)உடலுக்கு போதிய நீர் அருந்தாமை

இயற்கை வைத்தியம் :

1)மஞ்சணத்தி காய்
2)பெருஞ்சீரகம்
3)பட்டை
4)நார்த்தங்காய் இலை
5)இஞ்சி

செய்முறை :

* ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மஞ்சணத்தி காய் ஒன்று, பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி, பட்டை ஒரு துண்டு மற்றும் நார்த்தங்காய் இலை 3 எடுத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு உரலில் இந்த பொருட்கள் அனைத்தையும் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் இடித்த கலவையை போட்டு மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வெறும் வயிற்றில் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் தலையின் பின் பக்கத்தில் ஏற்படும் வலி முழுமையாக குணமாகும்.

Read More : ஏசி போட்டு தூங்கினால் இந்த பிரச்சனையை சந்திப்பீர்கள்..!! எச்சரிக்கையா இருங்க..!!

Advertisement