முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆண்களை விட பெண்களுக்கு ஏன் செக்ஸில் அதிக ஆர்வம் இருக்கிறது தெரியுமா..? இது தெரிஞ்சா நீங்க தான் கில்லி..!!

11:39 AM May 11, 2024 IST | Chella
Advertisement

வீடு, அலுவலகம் என எல்லா இடங்களில் உடலுறவு குறித்து ஆண் - பெண் பேசினால் மட்டுமல்ல, பெண்களே தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் கூட வெட்கப்படுகின்றனர். ஏனென்றால், பாலியல் ஆசைகள் குறித்து பெண்கள் வெளிப்படையாக பேசினால், அவர்களை வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் சூழலே காரணமாக இருக்கிறது. உடலுறவு குறித்து பேசுவதற்கு பெண்கள் வெட்கப்பட்டாலும், அந்த விஷயத்தில் பெண்களின் ஆசை மிக மிக அதிகம்தான். ஏனென்றால், பெண்களின் ஹார்மோன்கள் பாலியல் ஆர்வத்தை அதிகம் கொண்டிருப்பவை.

Advertisement

ஆனால், சமூகம் மற்றும் கலாச்சாரம் போன்ற புற காரணிகளால் பெண்களின் பாலியல் ஆசை கட்டுப்படுத்தப்படுகிறது. உண்மையில், பெண்கள் ஆண்களை விட மனதளவிலும், உடலளவிலும் அதிக பாலியல் ஆசை கொண்டவர்கள் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. அதுதான், ஆண்களை விட, அதிக நேரம் உடலுறவு கொள்ள பெண்கள் விரும்புவதற்கு காரணம். ஆண்கள் பொதுவாக ஒரேயொருமுறை உச்சத்தை எட்டிவிட்டால், சோர்வடைந்து தூங்கச் சென்றுவிடுவார்கள். ஆனால், பெண்கள், ஒரே உடலுறவின்போது, பலமுறை உச்சக்கட்டத்தை எட்டக்கூடியவர்கள். எனவே, பெண்கள் ஒரேயொரு முறை உச்சக்கட்டத்தை எட்டியவுடன் திருப்தி அடைவதில்லை. எனவே, கணவன், தனது மனைவியின் உச்சக்கட்டத்தை அறிந்து செயலாற்றுவதுதான், இனிமையான தாம்பத்தியத்திற்கு உதவும்.

ஆண்-ஆண், ஆண்-பெண், பெண்-பெண் இடையிலான பாலியல் உறவை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், பெண்-பெண் இடையிலான பாலியல் உறவில்தான், பெண்கள் முழு திருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம், பெண்கள் இருவருமே தங்களது தேவைகள் மற்றும் உச்சநிலையை புரிந்து கொண்டு தொடர்ந்து செயலாற்றியதே காரணம் என்கின்றனர். பெண்கள் பொதுவாக, படுக்கையறையில் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு பாலியல் உறவில் ஈடுபட விரும்புகிnறனர். அதாவது, பாலியல் ஆசை ஏற்பட்டதும் உடனே உடலுறவில் ஈடுபடுவதைவிட, தொடுதல், பேசுதல் அதன்பிறகு உடலுறவு கொள்வதில்தான் பெண்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இதன்மூலம், ஆண் ஒரேயொரு முறை உச்சக்கட்டத்தை எட்டினாலும், தாங்கள் பலமுறை உச்சக்கட்டத்தை எட்டி, திருப்தி அடைகிறார்கள். அப்படி இல்லாவிட்டால், பெண்கள் அடிக்கடி பாலியல் ஆசையால் அடிக்கடி தூண்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 20 வயதிற்குட்பட்ட பெண்களைவிட, நடுத்தர வயது பெண்கள், எண்ணற்ற பாலியல் ஆசைகளுடன் இருக்கின்றனர். அறிவியலின்படி, மாதவிடாய் நின்றுவிட்டால், பாலியல் ஆசை குறைந்துவிடும் என்ற அச்சத்தால், நடுத்தர வயதில் அதிக அளவில் உடலுறவில் ஈடுபட பெண்கள் விரும்புவதாக கூறுகிறது ஓர் ஆய்வு.

Read More: 3 நாட்கள் நைட் ஷிப்டு பார்த்தாலே இவ்வளவு ஆபத்தா..? இளைஞர்களே உஷார்..!!

Advertisement
Next Article