கோயில் குளங்களில் ஏன் காசுகளை போடுகிறோம் தெரியுமா..? உண்மையான காரணம் இதுதான்..!! நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..?
தமிழர்களின் ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் அறிவியல் காரணங்களும் இருக்கும். ஆனால், அதை ஆன்மீக ரீதியில் நம்பிக்கை என்ற பெயரில் பின்பற்றி வந்தனர். மஞ்சள் தெளிப்பது முதல் பாயில் படுப்பது வரை பல செயல்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அந்த வகையில், கோயிலுக்கு செல்பவர்கள் பலரும் நீர்நிலைகளில் காசுகளை (நாணயங்கள்) போடுவதை பார்த்திருப்போம். இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் இதற்கு பின்னால், ஓர் அறிவியல் காரணம் இருக்கிறதாம்.
இப்போது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் இருக்கும். செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல உடல்நலப்பிரச்சனைகள் வரும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர்.
அப்போது அதில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலந்து விடும். அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் அனைவரும் குடிநீராகப் பயன்படுத்தி வந்தனர். இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம். பின்னர், கனிமநீரை வாங்கி அருந்துகிறோம். செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது நல்லது. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.