ரத்தன் டாடாவின் ரூ.38,000 கோடி சாம்ராஜ்ஜியத்தை ஆளப்போகும் வாரிசுகள் யார் தெரியுமா..? வெளியான பரபரப்பு தகவல்..!!
மிகப்பெரிய வணிக சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த ரத்தன் டாடா (86), உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பிறகு அவர் சேர்த்து வைத்த ரூ.3,800 கோடி சொத்துக்களை யார் ஆளப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு இனி வரும் காலங்களில் அவரது சாம்ராஜ்ஜியத்தை கட்டி காக்கப் போகும் வாரிசுகள் யார் யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
1937ஆம் ஆண்டு மும்பையில் புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ரத்தன் டாடா, தனது 10 வயதிலேயே பெற்றோரை இழந்தார். அதன் பிறகு பாட்டி தான் அவரை வளர்ந்துள்ளார். தனிமை தான் அவருக்கு வாழ்க்கையின் புரிதலை தந்து ரூ.3,800 கோடி சாம்ராஜ்ஜியத்தை ஆள வைத்துள்ளது.
நோயல் டாடா
டாடா குழுமத்தின் பகுதியாக இருந்து வருகிறார். நவால் டாடா மற்றும் சிமோன் டாடாவிற்கு மகனாக பிறந்தார். மறைந்த ரத்தன் டாடா மற்றும் ஜிம்மி டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர். ரத்தன் டாடாவின் குடும்ப உறவுகளின் காரணமாக டாடா மரபை பின்பற்றுவதற்கான வாரிசுகளில் ஒருவராக இருக்கிறார். இவர்களது மகள்களான மாயா, லியா மற்றும் மகன் நெவில் ஆகியோரும் டாடா பாரம்பரியத்தை பின்பற்றுவதற்கான சாத்தியமான வாரிசுகளாக கருதப்படுகின்றனர்.
நெவில் டாடா
டிரெண்ட் லிமிடெட்டின் கீழ் ஸ்டார் பஜாரை வழி நடத்தி வருகிறார். இது அவரது புத்திசாலித்தனத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. மானசி கிர்லோஸ்கரை மணந்த அவர், டாடா குழுமத்தின் எதிர்காலத் தலைவராகத் திகழ்கிறார்.
லியா டாடா
ஹாஸ்பிட்டாலிட்டியில் கவனம் செலுத்தி வருகிறார். ஸ்பெயினில் உள்ள IE பிசினஸ் பள்ளியில் படித்துள்ளார். இந்திய ஹோட்டல் நிறுவனம் மற்றும் தாஜ் ஹோட்டல்களில் அவர் குறிப்பிடத்தக்க பங்கை வகித்துள்ளார். ஹாஸ்பிட்டாலிட்டியில் டாடா குழுமத்தை மேலும் விரிவுபடுத்த உதவினார்.
மாயா டாடா
நோயல் டாடா மற்றும் ஆலு மிஸ்ட்ரிக்கு மகளாக பிறந்தவர் மாயா டாடா. மாயா தந்தை ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதர். அதே போன்று அவரது தாயார், மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி. ஆதலால் டாடா குழுமத்துடன் பிணைந்துள்ளார். டாடா குழுமத்தில் ஒருவராக முக்கிய பங்கு வகிக்கிறார். பேய்ஸ் பிசினஸ் ஸ்கூல் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தில் படித்தவர். டாடா ஆப்பர்ஜூனிட்டிஸ் ஃபண்ட் மற்றும் டாடா டிஜிட்டல் ஆகியவற்றிற்கு மாயா பங்களித்துள்ளார். மேலும், டாடா நியூ ஆப் அறிமுகத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.