For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் தெரியுமா..? சரித்திரம் படைத்த கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர்..!!

It has been officially announced that the country's 18th Lok Sabha Speaker election will be held on June 26.
08:03 AM Jun 14, 2024 IST | Chella
இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் தெரியுமா    சரித்திரம் படைத்த கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர்
Advertisement

நாட்டின் 18-வது மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26ஆம் தேதி தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுள்ளார். 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டம் ஜூன் 24ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 24, 25 ஆகிய தினங்களில் புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். இதற்காக இடைக்கால சபாநாயகரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமிப்பார்.

பின்னர் ஜூன் 26ஆம் தேதி லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெறும். லோக்சபா சபாநாயகர் பதவியைப் பெறுவதில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் தீவிரமாக உள்ளது. ஆனால் பாஜக, லோக்சபா சபாநாயகர் பதவியை அவ்வளவு எளிதாக விட்டுத் தராது என்று சொல்லப்படுகிறது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆந்திரா பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி (என்டி ராமாராவ் மகள் - சந்திரபாபு நாயுடு மனைவியின் சகோதரி), முன்னாள் சபாநாயகர் ஜிஎம்சி பாலயோகியின் மகன் ஹரிஸ் மாதூர் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன.

இந்நிலையில், மக்களவை சபாநாயகர்களில் 5 பேர் சரித்திரத்தின் பக்கங்களில் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

* கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் - சுதந்திர இந்தியாவின் முதலாவது லோக்சபாவின் சபாநாயகர் (காங்கிரஸ்). இவர் 1952ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி மக்களவையின் முதல் சபாநாயகராக பொறுப்பேற்றார். 1949ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இடைக்கால சபாநாயகராக இருந்தார். பின் 1952இல் இயற்றப்பட்ட முதல் மக்களவைக்கு சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய பதவிக்கலாம் 1956-ல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

* நீலம் சஞ்சீவ ரெட்டி- ஜனதா கட்சியை சேர்ந்தவர். சுதந்திர இந்தியாவில் முதலாவது காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ஆவார். மொத்தம் 109 நாட்கள் சபாநாயகராகப் பதவி வகித்தார்.

* பல்ராஜ் ஜாக்கர் - காங்கிரஸை சேர்ந்த இவர், மொத்தம் 9 ஆண்டுகள் 329 நாட்கள் சபாநாயகராக பதவி வகித்தார். லோக்சபா சபாநாயகராக அதிக ஆண்டுகள் பதவி வகித்தவர். அதாவது 7-வது , 8-வது லோக்சபாவின் சபாநாயகராக பதவி வகித்தார்.

* ஜிஎம்சி பாலயோ- தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர், லோக்சபா சபாநாயகர் பதவியில் அமர்ந்த முதல் தலித் ஆவார். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 3 ஆண்டுகள் 342 நாட்கள் 12-வது லோக்சபா சபாநாயகராக பதவி வகித்தார்.

* சோம்நாத் சட்டர்ஜி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டை சேர்ந்த இவர், 14-வது லோக்சபாவின் சபாநாயகராக இருந்தார். 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் சபாநாயகராக பதவி வகித்தார்.

Read More : உங்கள் குழந்தைக்கு இந்த அறிகுறி இருக்கா..? பெற்றோர்களே உஷாரா கவனீங்க..!!

Tags :
Advertisement