உலகிலேயே மிகப்பெரிய பணக்கார பெண் யார் தெரியுமா? வரலாறு கூறும் நபர் இவர்தான்..!
உலகின் பணக்கார நபர்களின் பட்டியல் என்று சொன்னாலே உங்களுக்கு யார் பெயர்கள் எல்லாம் நியாபகத்திற்கு வரும். எலான் மஸ்க், பில்கேட்ஸ், அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ், லூயிஸ் வியூட்டன் நிறுவனர் அர்னால்டு பெர்னால்ட், இந்தியாவின் டாடா, அம்பானி, அதானி ஆகியோரின் பெயர்கள் தான் உங்கள் தோன்றும். இதில் பெண்கள் பெயர் ஒன்றாவது இருக்கிறதா? என்ற கேள்வி அனைவருக்கும் எழும்..
ஆனால் இவர்கள் அனைவரின் சொத்து மதிப்பை விட பல கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு அதிபதியாக ஒரு பெண் வரலாற்றில் இருந்துள்ளார். அவர்தான் சீனப் பேரரசி வூ. தன்னுடைய காலத்தில் மிகப்பெரும் செல்வந்தராக வூ இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் நிறைய கிடைத்துள்ளன. இந்த உலகில் வாழ்ந்த பெண்களிலேயே வூ தான் பணக்கார பெண்மணி என சில வரலாற்று நிபுணர்கள் உறுதியாக கூறுகின்றனர். இவரது சொத்து மதிப்பு மட்டுமே 16 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிட்டுள்ளனர்.
தாங் அரச பரம்பரையைச் சேர்ந்த பேரரசி வூ சொத்து மதிப்பின் முன்பு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இவை இருக்கிறது. புத்திக்கூர்மை நிறைந்த அரசியான வூ, தனது ஆட்சி கவிழாமல் இருக்கவும், தொடர்ந்து நீண்ட நாள் ஆட்சி கட்டிலில் இருக்கவும் பல தந்திரங்களையும் சூட்சமங்களையும் பயன்படுத்தியுள்ளதாக வரலாறு கூறுகிறது.
15 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இவர், சீனப் பேரரசை மத்திய ஆசியா வரை விரிவுப்படுத்தினார். இவரது ஆட்சியின் கீழ் சீனப் பொருளாதாரம் செழித்தோங்கியது என்றே கூறலாம். இவரது ஆட்சியில் தேயிலை மற்றும் பட்டு வணிகம் பெரும் வளர்ச்சியடைந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.
செல்வச் செழிப்பாகவும் ஆடம்பரமாகவும் வாழ்ந்து வந்த பேரரசி வூ, பல்வேறு திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களில் சித்தரிக்கப்பட்டு அழியாத்தன்மை பெற்றுள்ளார். குறிப்பாக ‘சீனப் பேரரசி’ என்ற தொலைக்காட்சி தொடரில் பேரரசி வூ-வாக பிரபல நடிகை ஃபேன் பிங்பிங் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.