For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரணாப் முகர்ஜி பிரதமராகாததற்கு யார் காரணம் தெரியுமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

12:30 PM Dec 06, 2023 IST | 1newsnationuser6
பிரணாப் முகர்ஜி பிரதமராகாததற்கு யார் காரணம் தெரியுமா    வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

தான் பிரதமராகாததற்கு சோனியா காந்தியே காரணம் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

Advertisement

கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரிய கட்சியாக உருவெடுத்தது. கட்சித் தலைவர் என்ற முறையில், சோனியா காந்தி பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இத்தாலி குடியுரிமை காரணமாக அவர் பிரதமராக பதவியேற்க கூடாது என பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது, சோனியா காந்திக்கு கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவு இருந்தும், பிரதமர் பதவி வேண்டாம் என்று அறிவித்த சோனியா காந்தி, சொந்தக் கட்சியில் இருந்து மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தார். இது அப்போது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது.

'பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து சோனியா காந்தி விலகும் முடிவுக்குப் பின்னர், ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தீவிர ஊகங்கள் எழுந்தன. மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் ஆகியோரின் பெயர்கள் இந்தப் பதவிக்கு வலுவான போட்டியாளர்களாக விவாதிக்கப்பட்டன. இந்நிலையில், ​​'சோனியா காந்தி என்னை பிரதமராக்க மாட்டார்' என தன் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியிடம் கூறியிருந்ததாகவும், பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து சோனியா விலகிய பிறகு, தனது தந்தையுடன் பேசிய தொலைபேசி உரையாடலை ஷர்மிஸ்தா தனது புத்தகமான 'இன் பிரணாப், மை ஃபாதர்: எ டாட்டர் ரிமபர்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புத்தகத்தில், காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஷர்மின்ஸ்தா, தனது தந்தையின் அரசியல் வாழ்க்கையில் இதுவரை அறியப்படாத சில புதிய சம்பவங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார். பிரணாப் முகர்ஜி இந்தியாவின் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். அவர் வெளியுறவு, பாதுகாப்பு, நிதி மற்றும் வர்த்தக அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அவர் இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக இருந்தார் (2012 முதல் 2017 வரை). பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 31, 2020 அன்று 84வது வயதில் காலமானார்.

Tags :
Advertisement