முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எந்த மாநிலத்தில் அதிக அசைவ உணவுகளை சாப்பிடுகிறார்கள் தெரியுமா..? தமிழ்நாட்டிற்கு எந்த இடம்..?

Who doesn't like being a vegetarian? Not only in our Tamil Nadu, but all over India, many people are non-vegetarians. What are the top 5 non-vegetarian states in our country? See this list.
10:46 AM Jul 10, 2024 IST | Chella
Advertisement

அசைவம் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. நம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பலரும் அசைவ உணவு பிரியர்களாக இருக்கின்றனர். நம் நாட்டில் முதல் 5 அசைவ உணவு சாப்பிடும் மாநிலங்கள் என்னென்ன? என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம்.

Advertisement

சமீபத்தில் வெளியான அறிக்கைகளின்படி, 98.7 சதவீதம் அசைவ உணவு உண்பவர்களுடன் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 97.8%, அசாமில் 78.6%, டெல்லியில் 63.2%, உத்தரப்பிரதேசத்தில் 55%, ராஜஸ்தானில் 26.8% அசைவ பிரியர்கள் உள்ளனர். அதேபோல லட்சத்தீவில், 98.4% ஆண்கள் அசைவ உணவு உண்பவர்கள் உள்ளனர். இது இந்தியாவிலேயே அதிகம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், லட்சத்தீவில் உள்ள மக்கள் தொகையை இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அது குறைவு தான்.

இந்த பட்டியலில் 14.1% உடன், ராஜஸ்தான் மிகக் குறைந்த இடத்தில் உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா ஆகியவை இந்தியாவில் சைவ உணவு உண்பவர்கள் குறைவாகவுள்ள மாநிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மிசோரம் ஆகியவை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உணவுகள் பொதுவாக கலாச்சாரம் சார்ந்தவையாக இருப்பதால் ஒவ்வொரு மண்ணுக்கு ஏற்றவாறு காணப்படுகிறது.

இந்தியாவில், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களில் கலாச்சார மற்றும் சமையல் விருப்பங்கள் காரணமாக அசைவ பிரியர்களின் சதவீதம் அதிகமாக இருக்கிறது. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் அசைவ உணவு வகைகளின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. மேலும், மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். ராஜஸ்தான் போன்ற மேற்கு மாநிலங்களில் அசைவ உணவு உண்பவர்களின் விகிதம் மிகக் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணனுக்கு மாதந்தோறும் ரூ.15,000 அனுப்பும் பிரபல நடிகர்..!! யார் தெரியுமா..?

Tags :
non vegஅசைவ பட்டியல்அசைவம்சைவம்
Advertisement
Next Article