உலகத்தின் கடைசி நகரம் எது தெரியுமா? பலரும் அறியாத உண்மை..!
புவியியலாளர்கள் உலகம் முழுவதும் பல சோதனைகளை மேற்கொண்டு, இறுதியாக, உலகின் கடைசி பகுதியை கண்டுபிடித்துள்ளனர்.
பூமி உருண்டையாக இருப்பதால் அதற்கு உண்மையான முடிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் புவி விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி உலகின் கடைசி பகுதியை வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் அல்லது ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள ஏமன் தீபகற்பம் அல்லது சிலியில் உள்ள கேப் ஹார்ன் ஆகியவை உலகின் முடிவு பகுதி என்று விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது. ஆனால் பெரும்பாலான புவியியலாளர்கள் இந்த நகரங்கள் உலகின் கடைசி பகுதிக்கு பதிலாக உலகின் எல்லைகள் என்று கூறுகின்றனர்.
தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் அமைந்துள்ள அர்ஜென்டினாவில் உள்ள உஷுவாய் நகரம் தான் பூமியின் கடைசி நகரம் என்று அழைக்கப்படுகிறது. உஷுவாய் கரடுமுரடான மலைகள் மற்றும் கரடுமுரடான கடல்களால் சூழப்பட்டுள்ளது. உஷுவாயின் முதல் கட்டிடமான சலுசியான் தேவாலயம் இன்றும் உள்ளது. கோடையில் கூட, வெப்பநிலை சில நேரங்களில் 12 டிகிரி செல்சியஸாகவும், சில நேரங்களில் 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
ஆண்டிஸ் மலைகளுக்கு நடுவில் உள்ள இந்தப் பகுதி நெருப்பு நகரம் என்று அழைக்கப்படுகிறது. வடக்கே மாகெல்லன் ஜலசந்தியும் தெற்கே பீகிள் கால்வாயும் இரண்டு பெருங்கடல்களையும் இணைக்கின்றன. உஷஜுவாய் ஒரு சிறிய நகரம். தற்போது மக்கள் தொகை 57 ஆயிரமாக உள்ளது. தென் துருவத்திற்கு செல்லும் அனைத்து கப்பல்களும் இங்கிருந்து புறப்படும். உஷுவாய் மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளது. ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பு யாகலேஸ் பழங்குடியினர் இங்கு வாழ்ந்தனர்.
சர்வதேச மோசடி அழைப்புகள்..!! ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!