நாம் சாப்பிட்ட எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் ஜீரணமாகும் தெரியுமா?. உடலில் என்னலாம் நடக்கும்?
Digest: நம் செரிமான அமைப்பு நமக்கு செய்யும் வேலையை நம்மில் பெரும்பாலோர் பாராட்டுவதில்லை. நம் உணவை சீரணித்து அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி நம் உள்ளுறுப்புகள் செயல்பட வழங்குகிறது. நம் செரிமான அமைப்பு சிக்கலான நகரும் பகுதிகளால் ஆனது. இது செரிமானத்தின் போது உணவை சீரணிக்க ஏதுவாக அமைக்கப்பட்டு உள்ளது. தினந்தோறும் உணவை சாப்பிடுகிறோம் வயிற்றுக்குள் போகிறது ஆனால் உள்ளே போய் என்ன நடக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கோமா.
நம் உடலை பற்றியும் உடற் செயல்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்வது நமக்கு பல வகைகளில் நன்மை அளிக்கும். வெளிப்படையாக உணவை சீரணிக்க முதல் வழி அதை உங்க வாயில் வைத்து மெல்ல வேண்டும். பற்கள் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்வதில்லை. இந்த செயல்பாட்டின் போது உமிழ்நீர் சுரப்பிகள் உங்க உணவை ஈரமாக்குகின்றன. நீங்கள் சாப்பிடும் போது உணவுக்குழாய் வழியாக நீங்கள் விழுங்குவதை எளிதாக்குகிறது என்று தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்பொழுது உணவானது உணவுக்குழாயில் இருந்து கீழே இறங்கிய பிறகு கீழ் உணவுக்குழாயை அடைகிறது. இங்கே உணவு வயிற்றுக்குள் செல்ல அனுமதிக்கும் ஒரு தசை உள்ளது. இப்பொழுது உணவானது வயிற்று தசைகளின் உதவியுடன் செரிமான சாறுகளுடன் கலக்கின்றன. மேலும் வயிற்றுப் புறத்தில் அமைந்துள்ள சுரப்பிகள் நொதிகள் மற்றும் வயிற்று அமிலத்தை உருவாக்குகின்றன, அவை உணவை மேலும் உடைக்க உதவுகின்றன.
சிறுகுடலில், செரிமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு, பெரிய குடலில், திரவக் கழிவுகள் மலமாக மாற்றப்படுகின்றன. இந்தக் கழிவுகள் அப்படியே மலக்குடலுக்கு மாற்றப்படுகின்றன. பெரிய குடலின் கீழ் முனையில் இருக்கும் மலக்குடல், குடல் இயக்கத்தின் போது மலத்தை வெளியே தள்ளும் வரை மலத்தை சேமிக்கிறது. உணவானது முழுமையாக செரிமானம் அடைய எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை தெரிந்து அதற்கேற்ப உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சீரணிக்க எடுக்கும் நேரம், வாயில் வைத்த நேரம் முதல் அதை மலமாக வெளியேற்றும் நேரம் வரை பல காரணிகளைப் பொருத்தது இருக்கும்.
சுமார் நான்கு முதல் ஆறு மணி நேரத்தில், செரிமான நொதிகள் மற்றும் பித்தம் ஆகியவை உணவை புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்களாக உடைக்கிறது. அதன் பிறகு நீர், நார்ச்சத்து மற்றும் செரிக்கப்படாத பொருட்கள் பெரிய குடலுக்குள் செல்கின்றன. இங்கு, 12 முதல் 48 மணி நேரத்திற்குள், பெருங்குடல் கழிவுப் பொருட்களிலிருந்து நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உறிஞ்சப்பட்டு, மலம் உருவாகிறது.
அதிக நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகள் உங்க செரிமானத்தை துரிதப்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சிக்கலான ரசாயனங்களை உடைப்பது உங்கள் உடலுக்கு மிகவும் கடினம். சிக்கலான சர்க்கரைகள், அதிக கொழுப்பு உணவுகள் மற்றும் அதிக புரத உணவுகள் சீரணிக்க அதிக நேரம் எடுக்கும். அதே மாதிரி நம்முடைய செரிமான அமைப்பு வயதுக்கு வயது மாறுபடும் என இரைப்பை குடல் நிபுணர் கூறுகிறார்.
எளிய கார்போஹைட்ரேட்டுகள் வயிற்றில் விரைவாக ஜீரணமாகின்றன, அதேசமயம் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள் நீண்ட காலமாக உடைந்து கொண்டே இருக்கும். பழங்கள் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துகள் வேகமாக ஜீரணமாகும். அதேசமயம் இறைச்சி செரிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம். அசைவம் ஜீரணமாக இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் இருக்கும் புரதங்களும் கொழுப்புகளும் சிக்கலான மூலக்கூறுகள். உடலில் இருந்து பிரிந்து செல்ல அதிக நேரம் எடுக்கும்.
இது தவிர, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஒரு நாளில் ஜீரணமாகின்றன. அதேசமயம் இனிப்புப் பொருட்களான மிட்டாய் பார்கள் மற்றும் சாக்லேட்கள் மிக வேகமாக ஜீரணமாகும். அதேசமயம் தண்ணீர் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்காது. எனவே, முடிந்தவரை தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
Readmore: HMPVக்கும் கோவிட்-19க்கும் என்ன வித்தியாசம்?. HMPV வைரஸை கண்டறிவது எப்படி?. சோதனைகள் என்ன?