For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிலவுக்கு மிக அருகில் இருக்கும் நாடு எது தெரியுமா..? இங்கு அரிய வகை விலங்குகளும் இருக்கிறதாம்..!!

Do you know which country in the world is closest to the moon? You can see more about it in this post.
01:18 PM Nov 08, 2024 IST | Chella
நிலவுக்கு மிக அருகில் இருக்கும் நாடு எது தெரியுமா    இங்கு அரிய வகை விலங்குகளும் இருக்கிறதாம்
Advertisement

உலகிலேயே சந்திரனுக்கு அருகில் உள்ள நாடு எது தெரியுமா..? அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Advertisement

சந்திரனுக்கு மிக நெருக்கமான இடம் விண்வெளியில் எதோ ஒரு இடத்தில் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த இடம் பூமியில் உள்ளது. ஆனால், எவரெஸ்ட் சிகரத்தில் இல்லை. பூமியின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டின் மையத்தில் இருந்து பூமத்திய ரேகைக்கு உள்ள தூரம் அதிகமாக உள்ளது. இதனால், புவியீர்ப்பு விசை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு நாடு தான் ஈக்வடார் (Ecuador). இந்த நாட்டிற்கு ஸ்பானிஷ் மொழியில் பூமத்திய ரேகை என்று அர்த்தம். பூமியை வட துருவமாகவும் தென் துருவமாகவும் பிரிக்கும் ஒரு கற்பனைக் கோடு தான் பூமத்திய ரேகை. உலகத்தில் மொத்தம் 13 நாடுகள் இந்த பூமத்திய ரேகையில் அமைந்துள்ளன. இந்த ஈக்வடார் நாடு மற்ற பகுதிகளை விட உயர்வானது. இந்த நாட்டினுடைய தலைநகரான குய்டோ, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,850 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனால், இந்த தலைநகரம் உலகத்தின் மிக உயர்ந்த இரண்டாவது தலைநகரம் ஆகும்.

இந்த நிலை காரணமாக இங்கு வாழ்க்கை சற்று கடினமாக உள்ளது. பொதுவாகவே ஒரு பகுதி உயரமாக இருக்கிறது என்பது அது விண்வெளிக்கு இடையில் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து தான். அந்தவகையில், சந்திரனின் மிக நெருக்கமான காட்சி ஈக்வடாரில் தான் இருக்கிறது. அதாவது, ஈக்வடாரில் உள்ள சிம்போராசோ (Chimborazo) மலையில் இருந்து சந்திரனின் மிக நெருக்கமான காட்சி உள்ளது. சிம்போராசோ மலையானது எவரெஸ்ட்டை விட பூமியின் மையத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இருந்தாலும், கடலின் மட்டத்தில் இருந்து உயரத்தின் அடிப்படையில் எவரெஸ்ட் உலகின் மிக உயரமான சிகரம் ஆகும்.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8, 848 மீட்டர். அதேபோல் சிம்போராசோவின் உயரம் சுமார் 6, 263 மீட்டர். அதன்படி, சிம்போராசோ மிக உயரமாக மலையாக இல்லாவிட்டாலும் சந்திரனுக்கு மிக அருகில் உள்ளது. சிம்போராசோவில் புவியியல் இருப்பிடம் காரணமாக, சூரியனின் வெப்பம் கடுமையாக இருக்கும். மேலும், பூமத்திய ரேகையில் இருப்பதால் ஆண்டு முழுவதும் பகல் மற்றும் இரவின் நீளம் கிட்டத்தட்ட சமமாக இருக்கும். இங்கு உலகின் மிகப்பெரிய ஆமைகள் முதல் கடல் உடும்புகள், பெங்குவின்கள், கடல் சிங்கங்கள் மற்றும் பல உயிரினங்கள் உள்பட மொத்தம் 9000 -க்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன.

Read More : பிரமிக்க வைக்கும் குகைகள்..!! பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

Tags :
Advertisement