For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உலகிலேயே தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் தரும் நாடு எது தெரியுமா..? லிஸ்ட் இதோ..!!

05:40 AM May 18, 2024 IST | Chella
உலகிலேயே தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் தரும் நாடு எது தெரியுமா    லிஸ்ட் இதோ
Advertisement

இந்தியாவில் தொழிலாளர்களின் சராசரி மாத சம்பளம் ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவாக இருப்பதாக உலக புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உலக புள்ளியியல் அமைப்பு, உலகம் முழுவதும் சராசரி மாத சம்பளம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 23 நாடுகளில் உள்ள தொழிலாளர்கள், சராசரியாக ரூ.1 லட்சத்திற்கு மேல் மாத சம்பளம் பெறுகின்றனர்.

Advertisement

உலகளவில் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் அளிக்கும் முதல் 10 நாடுகளில் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார், டென்மார்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. முதலிடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தில் சராசரி மாத சம்பளம் 6,096 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 567 ஆக உள்ளது.

லக்ஸம்பர்க்கில் ரூ.4,10,156 ஆகவும், சிங்கப்பூரில் ரூ.4,08,030 ஆகவும் அமெரிக்காவில் ரூ.3,47,181 ஆகவும், ஐஸ்லாந்தில் ரூ. 3,27,716 ஆகவும் உள்ளது. இந்தியாவில் சராசரி மாத சம்பளம் ரூ.50 ஆயிரத்திற்கும் கீழ் அதாவது ரூ.46,861 ஆக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சராசரி மாத சம்பள நாடுகள் பட்டியலில் இந்தியா 65-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவை விட குறைந்த சராசரி மாத சம்பளம் தரும் நாடுகளில் துருக்கி, பிரேசில்,அர்ஜெண்டினா, கொலம்பியா, பங்களாதேஷ், வெனிசுலா, நைஜீரியா, எகிப்து, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளன. நம் அண்டை நாடுகளான சீனாவில் சராசரி மாத சம்பளம் ரூ.87,246 ஆகவும், பங்களாதேஷில், ரூ.20,584 ஆகவும், பாகிஸ்தானில் ரூ.11,858 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More: ஒருவாரத்திற்கு இந்த உணவுமுறையை மட்டும் டிரை பண்ணுங்க..!! உடல் எடை நிச்சயம் குறையும்..!!

Advertisement