95 வருடங்களாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? வியக்கவைக்கும் தகவல்கள்..!!
உலகில் எத்தனையோ நாடுகள் பல்வேறு விதமான மர்மமான விஷயங்களை கொண்டுள்ளன. அப்படி ஒரு வித்தியாசமான விஷயத்தை தனக்குள் வைத்திருக்கும் நாடுதான் இது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அனைத்து பெரிய மத தலைவர்களும் இங்கு வாழ்கின்றனர். போப் இங்கே ஆட்சி செய்கிறார், ஆனால் இந்த நாட்டைப் பற்றிய சில விஷயங்கள் ஆச்சரியமாக இருக்கிறது. அது என்னவென்றால், இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை.
இந்த நாடு 1929 பிப்ரவரி 11 அன்று உருவாக்கப்பட்டது, 95 வருடங்களை கடந்துவிட்டாலும் இங்கு இதுவரை ஒரு குழந்தைகூட பிறக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். அது ஏன் தெரியுமா? இந்த நாட்டின் பெயர் வாடிகன் நாடு. உலகின் மிகச்சிறிய நாடு இந்த நாடுதான். இந்த நாட்டில் மருத்துவமனை இல்லை இதன் காரணமாக இது பல இடங்களில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பலமுறை மருத்துவமனை கோரப்பட்டும் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டது. இங்கே, யாராவது தீவிர நோய்வாய்ப்பட்டாலோ அல்லது ஒரு பெண் கர்ப்பமாக இருந்தாலோ, அவர் ரோமில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார் அல்லது அந்தந்த சொந்த நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நாட்டின் பரப்பளவு 118 ஏக்கர் மட்டுமே. இங்கு பிரசவ அறை இல்லாததால் யாரும் பிரசவம் செய்ய முடியாது. அதனால் அனைவரும் வெளியே செல்கின்றனர்.
இயற்கையான குழந்தைப் பிரசவம் நடைபெற இங்கு அனுமதி இல்லை. இங்கு யாருக்கும் நிரந்தர குடியுரிமை கிடைப்பதில்லை. இங்குள்ள பெண் எப்போது கர்ப்பமாகி, பிரசவ நேரம் நெருங்குகிறதோ அப்போது இங்குள்ள விதிகளின்படி குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை தாய் இங்கிருந்து செல்ல வேண்டும். இது மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும் விதி. இந்த நாட்டில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பதவிக்காலம் வரை மட்டுமே இங்கு தங்குவார்கள். அதுவரை தற்காலிக குடியுரிமை பெறுவார்கள். மருத்துவமனை பிரச்சனையின் காரணமாக இந்த நாட்டில் குழந்தைகள் இதுவரைக்கும் பிறந்தது இல்லை என குறிப்படப்பட்டள்ளது.
Read more ; 10 மனைவிகள், 88 குழந்தைகள், 350 துணைவிகளை வைத்திருந்த இந்திய மன்னர் யார் தெரியுமா?