முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி எங்கு இருக்கு தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்..!!

11:26 AM Apr 19, 2024 IST | Chella
Advertisement

இமாச்சலப் பிரதேசத்தின் எல்லை மாவட்டமான லாஹவுல் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்கில் 15,256 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியைக் கொண்ட தாஷிகாங் என்கிற கிராமம் உள்ளது. இந்தியா - சீனா எல்லையில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த வாக்குச்சாவடி தாஷிகாங் மற்றும் கெட்டே ஆகிய 2 கிராமங்களை மட்டுமே உள்ளடக்கியது.

Advertisement

இந்த கிராமங்களில் மொத்தம் 75 பேர் வசிக்கின்றனர். அதில், 30 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் என 52 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். ஸ்பிதி பகுதி ஒரு கடுமையான குளிர் பாலைவன பள்ளத்தாக்கு ஆகும். இது கிழக்கில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய தன்னாட்சிப் பகுதியின் எல்லையாக உள்ளது. இந்த பள்ளத்தாக்கில் மொத்தம் 29 வாக்குச் சாவடிகள் உள்ளன.

இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை, மாநிலத்தில் ஒரே கட்டமாக ஜூன் 1ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸின் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத் களம் காண்கிறார்.

Read More : ‘2026இல் நம்ம ஆட்சி தான்’..!! ‘இபிஎஸ் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை’..!! ஓபிஎஸ் தடாலடி..!!

Advertisement
Next Article