கருங்கல்லால் கட்டப்பட்ட சிவன் கோவில்.., எங்கு இருக்கிறது தெரியுமா.? அதன் சிறப்பம்சங்கள் என்ன.?
இலங்கை நாடு பௌத்த சமயத்தை பின்பற்றி போர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு. பௌத்த விகாரங்கள் மற்றும் புத்த சமயக் கோவில்கள் இருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே பழம்பெருமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்தக் கோவிலை பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் தரிசித்துச் செல்கின்றனர்.
இலங்கையின் மட்டக்களப்பு பிரதேசம் இந்துக்கள், புத்தர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையுடன் வாழும் ஒரு பகுதி. இங்குதான் பழம்பெருமை வாய்ந்த சிவன் கோவில் அமைந்திருக்கிறது இந்தப் பகுதியில் அமைந்திருக்கும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
அந்நியர் ஆட்சியின் போது இலங்கையில் இருந்த பல ஆலயங்கள் அழிக்கப்பட்டாலும் இந்த ஆலயம் எந்தவித சேதமுமின்றி கம்பீரத்துடன் இருக்கிறது. இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் நந்தி புல்லுண்ட கல் நந்தி என அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் சக்தி வாய்ந்த சிவ வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆலயம் சிவபெருமானின் மகிமையை பறைசாற்றுகின்ற ஆலயங்களில் ஒன்றாகும்.
இந்த ஆலயத்தில் 3000 திருமந்திரங்கள் கருங்கல்லால் செய்யப்பட்ட மண்டபத்தில் பதித்து வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் உலகிலேயே கருங்கல்லால் செய்யப்பட்ட முதல் சிவன் கோவிலும் இதுதான் என்பது இந்தக் கோவிலின் கூடுதல் பெருமை. இத்தனை சிறப்பம்சங்களையும் கொண்ட இந்த கோவில் இலங்கையில் அமையப்பெற்று இருக்கிறது.