For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அமரன் படம் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? இந்த தளத்தில் தான் வெளியாகிறது..

Do you know when is the OTD release of Amaran? Released on this site only..
09:56 AM Nov 27, 2024 IST | Mari Thangam
அமரன் படம் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா  இந்த தளத்தில் தான் வெளியாகிறது
Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31ஆம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎஃப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

Advertisement

சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே முதல் நாளில் பெரிய வசூலை பெற்ற திரைப்படம் இதுதான். தொடர்ந்து ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இது திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகிய எட்டு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகலாம். ஆனால் அமரன் திரைப்படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஓடிடியில் வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்திருந்தனர்

அதனாலேயே இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாவது தள்ளி போயிருந்தது. இந்த நிலையில் இந்த படம் டிசம்பர் ஐந்தாம் தேதி அல்லது 11-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் உரிமையை netflix 60 கோடி கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுபோல தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உட்பட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு தேசிய உணர்வு ஊட்டும் வகையில் அமரன் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தை காண ரெடியா இருக்கீங்களா மக்களே!

Read more : Vitamin B 12 Deficiency : நரம்பு மண்டலம் பாதிப்பு முதல் தோல் சுருக்கம் வரை.. வைட்டமின் பி12 குறைபாட்டால் இத்தனை பிரச்சனைகள் வருமா..?  

Tags :
Advertisement