For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இரவில் எந்த நேரத்தில் உணவு அருந்த வேண்டும் தெரியுமா..? - மருத்துவர் விளக்கம்

Do you know what time you should eat at night..? - Doctor explanation
07:17 PM Dec 06, 2024 IST | Mari Thangam
இரவில் எந்த நேரத்தில் உணவு அருந்த வேண்டும் தெரியுமா      மருத்துவர் விளக்கம்
Advertisement

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் நாம் உண்ணும் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்த்தின் படி உங்க உணவை நீங்கள் சரியாக தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். அதே நேரம் இரவில் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் லீமா மகாஜன் கூறிய விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

* இரவு உணவுக்குப் பிறகு ஸ்நாக்ஸ் வகைகள் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். இரவு உணவு உண்ட உடனே படுக்கைக்கு செல்ல வேண்டாம்.

* தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவு அருந்துவது சிறந்தது. இப்படி சாப்பிடுவதால் இரைப்பை ரிஃப்ளக்ஸ் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

* 6-8 மணியளவில் இரவு உணவை சாப்பிடுவதால், படுக்கை செல்வதற்கு முன் செரிமானத்திற்கு போதுமான நேரத்தை அனுமதிக்கிறது. உணவு நமது செரிமான அமைப்பில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறது, அது நம் வாயில் நுழையும் தருணத்திலிருந்து வயிற்றுக்கு வந்து இறுதியில் சிறுகுடலில் உறிஞ்சப்படும் வரை நடக்கும் நடைமுறையானது எளிதாக நடக்க வேண்டும் என்றால் நாம் சீக்கிரமாகவே சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

* நாம் சாப்பிடும் உணவு முழுமையாக செரிமானமாக சுமார் 1.5 - 2 மணிநேரம் ஆகும். உணவுகளை நமது குடல் உறிஞ்சி சத்துக்களை பிரிக்கும் செயல்முறையும் இதில் அடங்கும். தூக்கத்திற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உணவை உட்கொள்வது செரிமான அமைப்பு அதன் செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்த தேவையான நேரத்தை வழங்குகிறது.

* நாம் 9 மணிக்கு மேல் சாப்பிட்டுவிட்டு உடனடியாக தூங்க செல்வதால், நமது உடலுக்கு போதுமான நேரம் இருக்காது, இதனால் அஜீரணம், அசௌகரியம் அல்லது தூக்கத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்று கூறினார்.

* செரிமானம் முழுமையாக நடைபெறவில்லை என்றால் நமது உடலில் ஊட்டச்சத்துக்களை சரியான முறையில் உறிஞ்சுவதும் தடைபடுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இரவு உணவுக்கும், தூக்கத்திற்கும் இடையே 2-3 மணிநேர இடைவெளியை கடைப்பிடிப்பது சிறந்தது.

இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் : இரவு நேரங்களில் குறைந்த கார்ப்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு நேரங்களில் கடினமான உணவுகளை வயிறு முட்ட முட்ட எடுத்துக் கொண்டால் தூக்கம் சரியாக வராது. குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் எளிதாக சீரணிக்கும் மேலும் உங்களை லேசாக வைக்கும். இரவு 7 மணிக்கு மேல் உப்பான உணவுகளை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். ஏனெனில் உப்பு உடம்பில் நீர் தேக்கத்தை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இரவில் சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும்.

Read more ; ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம்.. ஆபாச போட்டோவை காட்டி ரூ.2.5 கோடி..!!

Tags :
Advertisement