For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நயன்தாரா முதல் சாய் பல்லவி வரை.. டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

Do you know what the top heroines in South Indian cinema have studied?
02:05 PM Dec 22, 2024 IST | Mari Thangam
நயன்தாரா முதல் சாய் பல்லவி வரை    டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகைகள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா
Advertisement

தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வரும் சமந்தா, தமன்னா, காஜல், அனுஷ்கா, நயன்தாரா, ரஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி தென்னிந்திய நாயகிகளின் கல்வித்தகுதிகள் என்னவென்று பார்க்கலாம்..

Advertisement

சாய்பல்லவி : நடிகை சாய் பல்லவி எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றுள்ளார் என்பது பல பேட்டிகளில் அவரே குறிப்பிட்டுள்ளார். நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றால் மருத்துவத் துறையில் பணியாற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.

சமந்தா : தனது பள்ளி, கல்லூரிப் படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தவர். சென்னையில் பி.காம் பட்டம் பெற்றுள்ளார். 2010 ஆம் ஆண்டு வெளியான ஏ மாயா சேசாவே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

கீர்த்தி சுரேஷ் : நட்சத்திர குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷ், பேஷன் டிசைனிங்கில் பட்டம் பெற்றுள்ளார். நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி, குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தந்தை சுரேஷ் ஒரு இயக்குனர்.

தமர்னா : தமன்னா பாட்டியா கலைத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டு வெளியான இந்தி படமான சாந்த் ச ரோஷன் சேரா மூலம் திரையுலகில் நுழைந்தார்.

காஜல் அகர்வால் : இவர் மாஸ் மீடியாவில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். படிப்பை முடித்த பிறகு, மாடலிங் துறையில் நுழைந்து, பின்னர் நாயகியானார்.

ராஷ்மிகா மந்தனா : இவர் உளவியல், பத்திரிக்கை மற்றும் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற கலைத்துறை மாணவி. 2016 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான கிரிக் பார்ட்டி மூலம் நடிக்கத் தொடங்கினார்.

பிரியா பவானி சங்கர் : தமிழ் சினிமாவில் கைவசம் டஜன் கணக்கிலான படங்களுடன் செம்ம பிசியான ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் பொறியியல் கல்லூரியில் முடித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் : நடிகை ஸ்ருதி ஹாசன், அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, 2009 ஆம் ஆண்டு வெளியான லக் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

நயன்தாரா : ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

Read more ; அய்யய்யோ.. நாளைக்கு திங்கள் கிழமையா..? ஞாயிறு இரவு திடீர் கவலை வருதா.. அறிகுறிகள் என்ன..? தவிர்ப்பது எப்படி..?

Tags :
Advertisement