For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரெட் பட நடிகை இப்ப என்ன பண்றாங்க தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

11:54 AM May 31, 2024 IST | Mari Thangam
ரெட் பட நடிகை இப்ப என்ன பண்றாங்க தெரியுமா    இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்
Advertisement

ரெட் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா கில். மாடல் அழகியாக இருந்த பிரியா கில்லுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான ‘தேரி மேரா சப்னா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்திரச்சூர் சிங், அர்ஷத் வர்சி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Advertisement

சுனில் ஷெட்டியுடன் படே தில்வாலா படத்தில் நடித்திருந்தார். அகத்தியன் இயக்கிய சிர்ஃப் தும் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதால் அதில் நடித்த பிரியா கில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அஜித் நடிப்பில் வெளியான ‘ரெட்’ படத்தின் கதாநாயகியாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். ரெட் திரைப்படத்தில் ஒல்லி குச்சி உடம்புக்காரி பாடல் மூலம் மிகவும் பிரபலமானார்.

தமிழ் சினிமாவை விட்டு விலகினாலும் இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். 2006ம் ஆண்டு வெளியான ‘பைரவி’ திரைப்படம் தான் பிரியா கில் நடித்த கடைசி திரைப்படம். அத்துடன் சினிமாவில் இருந்து விலகினார். 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு டென்மார்க்கில் செட்டிலாகிவிட்டார். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் ஒரு மாடலிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.

Read more ; ‘மறந்து போன திண்ணை வீடுகள்!!’ தொலைந்து போன சந்தோஷம்!!

Tags :
Advertisement