Samuthirakani | 'சமூக அக்கறைமிக்க படைப்பாளி' நடிகர் சமுத்திரக்கனி பற்றி பலருக்கு தெரியாத தகவல்..!!
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகர்களாகவும் முத்திரை பதித்தவர்களாக விசு, பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் உள்ளனர். இந்தப் பெரும் பட்டியலில் இணைவதற்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளவர்தான் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி.
நடிகர் சமுத்திரக்கனி. கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக ஆரம்பித்து இயக்குநர், நடிகர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டவர். ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இயக்கம், நடிப்பு என இரண்டு குதிரைகளிலும் வெற்றிச் சவாரி செய்துகொண்டிருப்பவர்களில் முக்கியமானவரான சமுத்திரக்கனி ஒரு சமூகப் பொறுப்புள்ள திரைக் கலைஞர் என்ற அங்கீகாரத்தையும் மக்கள் மத்தியில் பெற்றிருக்கிறார்.
எப்போதும் சமூக அக்கறை கொண்ட சமுத்திரக்கனி சினிமாவில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார் என்றே சொல்லலாம். ராஜபாளையத்தைச் சேர்ந்த சமுத்திரக்கனி, தனது சொந்த ஊர் மக்களுக்காக விநாயகர் கோயில் கட்டிக் கொடுத்துள்ளாராம். இவ்வளவு ஏன், வருடந்தோறும் அன்னதானமும் செய்வாராம். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் கிட்டத்தட்ட 1000 பேருக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். அதில், இப்போது வரையிலும் 170 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய உதவி அளித்திருக்கிறார். இது போன்று இன்னும் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.
Read more ; 15 தலைமுறையாக மலை உச்சியில் தீபம் ஏற்றும் பருவத ராஜகுலத்தினர்..! இதன் பின்னணியில் இருக்கும் வரலாறு என்ன?