முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஐப்பசி மாதம் என்னென்ன சிறப்புகள் தெரியுமா..? அது என்ன அன்னாபிஷேகம்..? இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க..!!

If one observes fast on the day of Vaparirai Ekadasi in the month of Aipasi, poverty will be removed and hunger will disappear.
07:50 AM Oct 22, 2024 IST | Chella
Advertisement

நம் முன்னோர்கள் ஒவ்வொரு மாதத்திலும் அந்தந்த மாதத்தில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள், சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டே திருவிழாக்களையும் வகுத்து வைத்துள்ளனர். இப்போது நடைபெற்று வரும் ஐப்பசி மாதத்தைத் துலா மாதம் என்று அழைக்கிறோம். துலா என்றால் தராசு என்று பொருள். வருடத்தில், 12 மாதங்களிலும் ஒப்பிடுகையில் இந்த ஐப்பசி மாதத்தில் தான் பகலும் இரவும் சரிசமமாக இருக்கும்.

Advertisement

இந்த மாதத்தில் பல பண்டிகைகளும், விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஐப்பசி மாதத்தில் தான் அனைத்து நதிகளும் அதன் நீரில் போக்கிய மனிதர்களின் பாவங்களை காவிரியில் கரைப்பதாக ஐதிகம். இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் முன்வினைப் பாவங்கள் நீங்கும். இந்த மாதத்திற்கு பல்வேறு ஆன்மிக சிறப்புகளும் உள்ளன.

ஐப்பசி பௌர்ணமி

ஐப்பசி பௌர்ணமி சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த நாளில் சிவபெருமானுக்கு சமைத்த சாதம், காய்கறிகள் மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்யப்படும். நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

வளர்பிறை ஏகாதசி

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் விரதம் கடைபிடித்தால், வறுமை நீங்கி, பசிப்பிணி அகலும். இந்த ஏகாதசி 'பாபாங்குசா" என அழைக்கப்படுகிறது.

ஐப்பசி சதயம்

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜசோழன். இவரது பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தேய்பிறை ஏகாதசி

ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியில் விரதமிருந்து வழிபட முன்வினைப் பாவங்கள் நீங்கும். இந்த ஏகாதசி "இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது.

கந்த சஷ்டி

ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள 6 நாட்களும் கந்த சஷ்டி காலமாக முருகன் மற்றும் சிவ ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

தீபாவளி

ஐப்பசி மாதம், தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படும்.

Read More : புயல் வந்தால் என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்யக்கூடாது..? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Tags :
அன்னாபிஷேகம்ஐப்பசி மாதம்பௌர்ணமி
Advertisement
Next Article