முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வீட்டு வாசலில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்தினால் என்ன நடவடிக்கை தெரியுமா..? ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

The Madras High Court has ordered the traffic police to report what action will be taken against those who park vehicles without permission at the door in Chennai.
04:45 PM Aug 21, 2024 IST | Chella
Advertisement

சென்னையில் வீட்டு வாசலில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் வாகனப்புகை தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால், நீதிமன்றமே அவ்வபோது தலையிட்டு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தமிழ்நாட்டில் தணிக்கை செய்வதற்காக வாகனப்புகை சோதனை மையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, உரிமம் பெறுவது, பெயர் மாற்றம் செய்வது ஆகியவற்றிற்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் வாகனங்களுக்கு வாகனப் புகை தணிக்கை சான்றிதழ் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தனியார் நிறுவன அதிகாரி கிஷார் என்பவர் மனு ஒன்றை உயர்நீதிமன்றம் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "சென்னை அண்ணாநகர், N பிளாக்கில், 25-வது தெருவில் நான் வசித்து வருகிறேன். எங்கள் குடியிருப்பு பகுதியில், தெருவோர உணவு கடைகளை, உரிமம் பெறாமல் நடத்தி வருகின்றனர். தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை அருகில் உள்ள தெருக்களில் நிறுத்தி வைக்கின்றனர்.

இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது. எனவே, உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளையும், அனுமதியின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''மனுதாரரின் புகாரை விசாரித்து வாகனங்கள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில், நோ பார்க்கிங் போர்டு வைக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இதையடுத்து, "குடியிருப்பு பகுதிகளில் வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வாசலில், வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பதற்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

Read More : விஜய்யின் தவெக கட்சிக் கொடியில் இடம்பெறும் வாசகம்..!! என்ன தெரியுமா..?

Tags :
Chennaichennai high courttraffic police
Advertisement
Next Article