மனைவிக்கு துரோகம் செய்யும் கணவனுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?
கருட புராணம் இந்து மதத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்று. இந்த கருட புராணத்தில் மனிதர்களின் வாழ்க்கை, இறப்பு, அடுத்த பயணம் அதாவது.. இறப்புக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை விளக்கியுள்ளனர். மேலும் மனிதன் செய்யும் பல்வேறு கர்மாக்களுக்கு வெவ்வேறு தண்டனைகளையும் விளக்கியுள்ளனர். அந்த வகையில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என கருட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணியங்களை எம லோகத்தில் வசிக்கும் சித்ரகுப்தன் என்னும் கணக்குப்பிள்ளை தனது நோட்டில் குறித்து வைத்திருப்பார். இந்த பாவத்தின் தன்மைக்கு ஏற்ப எமதர்மன் தனது கிங்கர்களின் மூலம் தண்டனைகளை நிறைவேற்றுவார் என்றும் 28 கொடிய நரகங்களைப் பற்றியும் அங்கு கொடுக்கப்படும் தண்டனைகளைப் பற்றியும் பட்சி ராஜனான கருடனுக்கு விளக்கமாக கூறுகிறார் மகாவிஷ்ணு.
பிறரது மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடித்த பாவிகள் அடையுமிடம் தாமிரை நரகம். கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம். கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம். பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் செல்லும் நரகம் ரௌரவமாகும்.
மனைவியைத் துன்புறுத்தி வதைக்கும் நபர்களுக்கு லாலாபட்சம்’ நரகம். இங்கு ஆன்மாக்கள் தீக்கோலால் சுட்டுத் தண்டிக்கப்படும். எந்தத் தொந்தரவும் செய்யாத மிருகங்களை வதைக்கும் நபர்களுக்கு பிராணிரோதம் நரகம். இங்கு ஆன்மாக்கள் கூரிய அம்புகளால் குத்தப்பட்டு துன்பத்தை அனுபவிக்கும்.