இந்த இலைகளின் மருத்துவ ரகசியம் பற்றி தெரியுமா..? பல பிரச்சனைகளை சரிசெய்யும்..!! ஆண்மைக்கும் சூப்பர் தீர்வு..!!
இந்து சமயத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சம்பிரதாயம், சடங்குகளுக்கும் ஒவ்வொரு அறிவியல் ரீதியான சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அதை நாம் நாளுக்கு நாள் அறிந்து கொள்ளாமல், அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல், நாகரீகம் என்ற பெயரில் மேற்கத்திய பழக்க வழக்கங்களைக் கையில் எடுத்து, நம்முடைய கலாச்சாரம், மருத்துவத்தைக் கைவிட்டதே காரணமாகும். இதனால் நோய்கள் அதிகரித்து வருகின்றன. நம் முன்னோர்கள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆன்மீகத்தோடு சேர்த்துப் பயன்படுத்திய மாவிலை, வில்வ இலை, துளசி இலை, அறுகம்புல், வேப்பிலை ஆகிய 5 இலைகளின் ரகசியங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
முன்பெல்லாம் பசு மாடு அருகம் புல் தான் அதிகம் மேயும். அந்த பசு போட்ட சாணத்தை எரித்து கிடைக்கக்கூடிய சாம்பல், ஓர் சிட்டிகை வாயில் போட்டுக் கொள்வர். இதனால் பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். நம் முன்னோர்கள் விபூதி என்று அழைப்பதை விட சாம்பல் என்றே அதிகமாக அழைத்து வந்தனர். நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாக வேலை செய்ய வேண்டுமெனில் நம் உடம்பில் தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்து சுரக்க வேண்டும். இந்த தைராய்டு சுரப்பியை வலுப்படுத்துவதும், சரியாக சுரக்க உதவுவது துளசி இலை. உடலில் எலும்பு உறுதியாக இருக்க, உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்க, உடலுறவுக்கு மிகவும் முக்கியான தாதுவாக இருப்பது காப்பர். இந்த தைராய்டு சுரப்பி சரியாக இருந்தால் நம் உடல் வலுவாக இருக்கும்.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு சில மாதங்களிலேயே உடல் வலு குறைந்து போய்விடும். துளசி இலையில் காப்பர் அதிகம் உள்ளது. அதனால் முன்னோர்கள் வீட்டில் துளசி செடி வளர்த்து வந்தனர். பெருமாள் கோயில்களில் பிரசாதமாகத் துளசி இலை இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது. உடல் மட்டுமல்ல மனதையும் வலுப்படுத்தக்கூடியது துளசி. துளசி இலை அதிகம் சாப்பிட்டால் ஆண்மை போய்விடும் என்பது மூட நம்பிக்கை. துளசியும், சீரகமும் (Tulsi Leaves And Cumin) சாப்பிடுபவன் அதிகம் குழந்தை பெற்றுக் கொள்வான். அவர்களின் இனப்பெருக்க மண்டலம் வலுவடையச் செய்கிறது.
வேப்பிலை ஒருவரின் பரம்பரையாக அவர்களின் ஜீன்களில் இருக்கக்கூடிய பிரச்சனையை போக்கக்கூடியது. நம் முன்னோர்கள் கார உருண்டை என்று பிள்ளைகளுக்குக் கொடுத்து வந்தனர். வேப்பங்கொழுந்து, சீரகம், மிளகு, வெல்லம், பெருங்காயம் அல்லது பூண்டு சேர்த்து கார உருண்டை தயாரித்த்னார். அதை குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். குழந்தைகள் வயிற்றில் இருக்கும், புழு, பூச்சிகள் நீங்கும், வயிறு சார்ந்த பிரச்சனைகளே வராது.
வில்வ இலை நம் மூன்று ஜென்ம பாவத்தை அழிக்க வல்லது வில்வ இலை. வில்வத்தை நாம் தொட்டால் தான் நமக்கு அதற்கான பலன்கள் கிடைக்கும். மாமர இலை, உயிர்கள் ஜனிக்க வேண்டுமானால் துவர்ப்பு என்பது கட்டாயம் தேவை. துவர்ப்பு கொண்ட மா இலையினையும், அது உருவாக்கக்கூடிய மாம்பழத்தை மட்டும் சாப்பிடுகிறோம். ஆனால் அதை விட முக்கியமானது மாங்கொட்டை. மாங்கொட்டை, மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக இப்போதும் கிராமத்தில் நம்பப்படுகிறது. மாவிலை வீடுகளில் நிலையில் கட்டுவது வழக்கம். எதிர்மறை சக்திகளைப் போக்க வல்லது மாவிலை. துவர்ப்பு கொண்ட மாங்கொட்டை சாப்பிட்டால் சிறுநீரக பிரச்னைகள் சரியாகும்.