தவெக கட்சிக் கொடியின் அர்த்தம் என்ன தெரியுமா..? இவ்வளவு பெரிய வரலாறே இருக்கா..?
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடி மற்றும் பாடலை இன்று (ஆகஸ்ட் 22) விஜய் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கீழும் சிகப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் உள்ள அந்த கொடியில் வாகை பூவும், 2 யானைகளும் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலும் வெளியானது. பாடலாசிரியர் விவேக் வரியில், தமன் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்த கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்றது. கட்சிக்கொடி அறிமுக விழாவுக்கு 5,000 பேர் பங்கேற்பார்கள் எனக்கூறி காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு அனுமதி கோரியிருந்த நிலையில், 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. விஜயின் தலைமையில் தவெக நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நெஞ்சில் கை வைத்து, உறுதி மொழியை விஜய் வாசிக்க, நிர்வாகிக்ள் உறுதிமொழி ஏற்றனர்.
கட்சிக் கொடிக்கான அர்த்தம் என்ன..?
இந்நிலையில், கட்சிக் கொடிக்கான அர்த்தம் பின்னர் தெரிவிக்கப்படும் என விஜய் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், கொடி அர்த்தம் குறித்து, சங்க காலத்தில் மன்னர்கள் பயன்படுத்தி வந்தமையால், அதோடு தொடர்பு படுத்தி வைத்து பார்க்கையில், 'சங்ககாலத்தில் இருந்து தமிழ் நிலத்தில் வாகை மலர் இருந்து வருகிறது. போர் புரிபவர்கள் வெற்றியின் அடையாளமாக வாகை மலரை சூடி வருவார்கள். வாகை மலர் வெற்றியின் குறியீடு.
போர் புரிய சென்ற தலைவன் திரும்பி வரும்போது கழுத்தில் அணிந்து வரும் மலர் மாலையை கொண்டே போரின் நிலையை அறிவார்கள். வாகை மலர் அணிந்து வந்தால் வெற்றி பெற்றவர் என கருதப்படுவர். ஆனால், அதற்கான அர்த்தத்தை மாநாட்டில் கூறுகிறேன் என விஜய் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாநாட்டில் கட்சியின் கொள்கை மற்றும் அடுத்தகட்ட நகர்வு குறித்து தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்..!! களத்தில் இறங்கிய மத்தியப் படை..!! மருத்துவமனையில் பரபரப்பு..!!