பல 100 கோடி டாலர்களில் ப்ராஃபிட்.! இந்த டாப் பிராண்டுகளின் முதல் பிஸ்னஸ் என்ன தெரியுமா.?
இன்று உலகில் மிகப்பெரிய கம்பெனிகளாக இருக்கும் பல நிறுவனங்கள் ஆரம்பத்தில் மிகச் சிறிய நிறுவனங்களாக இருந்திருக்கிறது. மேலும் அவை தங்களது நிறுவனங்களின் தொடக்கத்தில் தற்போது தயாரிக்கும் பொருட்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பொருட்களையே தயாரித்திருக்கின்றன. இன்று உலகில் பல நூறு கோடி டாலர்கள் வருமானத்தை ஈட்டும் கம்பெனிகள் தங்கள் நிறுவனத்தின் தொடக்கத்தில் எந்தப் பொருட்களை தயாரித்தன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
செல்போன் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் நோக்கியா. தற்போது ஆண்ட்ராய்டு செல்போன்களின் வருகைக்குப் பிறகு இந்த நிறுவனத்தின் மார்க்கெட் சரிந்து இருந்தாலும் நோக்கியா விற்கு என்று தனி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்த நோக்கியா நிறுவனம் தொடக்கத்தில் டாய்லெட் பேப்பர்களை தயாரிக்கும் நிறுவனமாக இருந்திருக்கிறது. எலக்ட்ரானிக் உலகில் ஜாம்பவானாக விளங்கும் சாம்சங் நிறுவனம் கொரியாவில் ஒரு பல சரக்கு கடையாக தங்களது தொழிலை ஆரம்பித்து இருக்கிறது.
இன்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களையும் பந்தய கார்களையும் தயாரிக்கும் லம்போர்கினி நிறுவனம் தங்கள் ஆரம்ப கட்டத்தில் டிராக்டர்களை தயாரித்து விற்பனை செய்திருக்கிறது. இன்று உலகெங்கிலும் ஃபர்னிச்சர்களின் முதல் தரமான பிராண்ட் ஆக விளங்கும் ஐகேஇஏ நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பேனா ஆகும். எலக்ட்ரானிக் உலகின் மற்றொரு ஜாம்பவானாக விளங்கும் எல்ஜி நிறுவனம் தங்கள் தொழிலின் ஆரம்பகட்டத்தில் பேசியல் கிரீம் தயாரித்து விற்பனை செய்திருக்கிறது.