காளானை இப்படி பயன்படுத்தி பாருங்க..! உடல் எடை எடை சல்லுனு குறையும்.. நோயும் அண்டாது..!!
புரதச்சத்து முதல் மொத்த சத்துக்களும் நிரம்பி காணப்படும் பொருள்தான் காளான்.. இந்த காளானின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? எதற்கெல்லாம் உதவுகிறது தெரியுமா?
காளான் என்பது சைவ உணவு பிரியர்கள் மற்றும் அசைவ உணவு பிரியர்கள் என அனைவருக்கும் பிடித்தமான உணவு பொருளாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு சுவையுடைய காளான் உடலில் பல்வேறு நன்மைகளையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காளானை எந்த நேரத்தில் எப்படி சமைத்து சாப்பிட்டால் உடல் எடை ஒரே வாரத்தில் மேஜிக் போல குறையும் என்பது குறித்து பார்க்கலாம்?
தற்போதைய நவீன காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உடல் எடை அதிகரித்து பல நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சியும், சரியான உணவு முறையும் போதுமானது. ஆனால் ஒரு சிலரால் உணவு கட்டுப்பாடை சரியாக பின்பற்ற முடியாத காரணத்தினால் உடல் எடையை குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர் அப்படிப்பட்டவர்களுக்கு காளான் ஒரு வரபிரசாதமாக இருந்து வருகிறது.
* காலையில் காளானை சாலட் போல செய்து சாப்பிட்டு வந்தால் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும்.
* மதிய நேரத்தில் பிரவுன் அரிசியுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும்.
* காளான் சூப் மதிய உணவிற்கு பின்பாக குடிப்பது உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது.
மேலும் காளானில் நார்ச்சத்து, புரதம், தாதுக்கள், வைட்டமின் சி, வைட்டமின், பி, வைட்டமின் டி, தாமிரம், பொட்டாசியம் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் மருத்துவர்களும் காளான் சாப்பிட அறிவுறுத்தி வருகின்றனர்.
Read more ; QR CODE-ஐ ஸ்கேன் செய்தால் போதும்.. இனி போலி மருந்துகளை ஈஸியா அடையாளம் காணலாம்..!! அசத்தல் அப்டேட்..