முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஐசிஐசிஐ, எஸ்பிஐ உள்ளிட்ட ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் எடுக்க முடியும் தெரியுமா..? இதை தெரிஞ்சிக்கோங்க..!!

ATM centers have limits on how much cash you can withdraw per day. You can see about it in this post.
09:00 AM Nov 11, 2024 IST | Chella
Advertisement

வங்கி கணக்கு வைத்திருக்கும் பொதுமக்கள் பெரும்பாலும், தங்கள் பணத்தை எடுக்க ஏடிஎம் மையங்களை நாடிச் செல்கின்றனர். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்தில் வேண்டுமானாலும் நமக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனாலும், இதில் சில விதிமுறைகள் உள்ளன. ஏடிஎம் மையங்களில் ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம் என்று வரம்பு உள்ளன. அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

Advertisement

ஐசிஐசிஐ வங்கி :

ஐசிஐசிஐ வங்கி ஏடிம்மை பொறுத்தவரை வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், ஐசிஐசிஐ வங்கியின் டைட்டானியம் டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு ரூ.1,00,000 வரையும், ஸ்மார்ட் ஷாப்பர் கோல்டன் டெபிட் கார்டு மூலம் ரூ.75,000 வரையும், ஸ்மார்ட் ஷாப்பர் சில்வர் டெபிட் கார்டு மூலம் ரூ.50,000 வரையும் பணம் எடுக்கலாம்.

எஸ்பிஐ வங்கி :

ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா வங்கியை பொறுத்தவரை ரூ.40,000 ஆக இருந்த வரம்பை ரூ.20 ஆயிரமாக குறைத்துள்ளது. எஸ்பிஐ கிளாசிக், மாஸ்ட்ரோ டெபிட் கார்டுகளுக்குப் பொருந்தும் புதிய ஏடிஎம்களில் பணம் எடுக்கும் விதிகள் அக்.31ஆம் தேதி முதலே அமலுக்கு வந்துள்ளன. அதேபோல், குளோபல் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் வரையும், பிளாட்டினம் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு மூலம் ரூ.1 லட்சம் வரையும் பணம் எடுக்கலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி :

பஞ்சாப் நேஷனல் வங்கியின் பிளாட்டினம் அட்டை மூலம் ஒரு நாளைக்கு ரூ.50,000 வரையும், கிளாசிக் கார்டு மூலம் ஒரு நாளைக்கு ரூ.25,000 வரையும் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

HDFC வங்கி :

பிளாட்டினம் சிப் டெபிட் கார்டு மூலம் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரையும், டைட்டானியம் ராயல் டெபிட் கார்டு மூலம் ரூ.75,000 வரையும், HDFC EasyShop டெபிட் கார்டு மற்றும் HDFC RuPay பிரீமியம் டெபிட் கார்டு மூலம் ரூ.25,000 வரையும், ஈஸிஷாப் டைட்டானியம் டெபிட் கார்டு மூலம் ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம்.

ஆக்சிஸ் வங்கி :

ஆக்சிஸ் வங்கி தினசரி ரொக்கமாக திரும்பப் பெறும் வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. அதேபோல், ஆக்சிஸ் வங்கியின் டைட்டானியம் பிரைம் மற்றும் பிளஸ் டெபிட் கார்டுகளில் வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம்.

Read More : ஆபாச வீடியோக்களை பார்த்து ஆசையை அடக்க முடியாத மாமனார்..!! மருமகளை உடலுறவுக்கு அழைத்த பரபரப்பு சம்பவம்..!!

Tags :
ஆக்சிஸ் வங்கிஎஸ்பிஐ வங்கிஐசிஐசிஐ வங்கிபஞ்சாப் நேஷனல் வங்கிஹெச்டிஎஃப் சி
Advertisement
Next Article