முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

+2 பொதுத்தேர்வில் நடிகர் தனுஷின் மகன் யாத்ரா எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா?

04:39 PM May 08, 2024 IST | Mari Thangam
Advertisement

சமீபத்தில் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், நடிகர் தனுஷ் இதில் எவ்வளவு மார்க் எடுத்தார் என்பது குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் சிறந்த நாயகனாக வளர்ந்து இருக்கிறார். இவர் நடிப்பு என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் ஹிட் கொடுத்துள்ள அவர், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு, இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற, இவர்களுக்கு 2006ஆம் ஆண்டு ‘யாத்ரா’ என்ற மகனும், 2010ஆம் ஆண்டு ‘லிங்கா’ என்ற மகனும் பிறந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சமீப காலமா பிரிந்து வாழ்ந்து வந்தாலும், தங்களது இரு பிள்ளைகளையும் Co-Parenting முறையில் வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், 12 ஆம் வகுப்பு படித்து முடித்த யாத்ராவின் தேர்வு மதிப்பெண்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மொழிப்பாடத்தில் 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 92, கணக்கு 99, பிசிக்ஸ் 91, கேமிஸ்ட்ரி 92, பயாலஜியில் 97 மதிப்பெண் பெற்று 600க்கு 569 மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. 

Tags :
12th marksactor dhanush son
Advertisement
Next Article