IAS, IPS அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கால் காசாக இருந்தாலும் கவர்மென்ட் காசாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் நீண்ட காலமாக இருக்கிறது. தற்போது தனியார் துறைகளில் வேலை நிலைத்தன்மை இல்லாததால், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளில் சேர இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் பதிவிகள் மிக உயர்ந்த பதவிகள் என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த பதவிகளுக்கு எவ்வளவு மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரியுமா?.அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
IAS அதிகாரிகளின் மாத சம்பளம் : ஐஏஎஸ் அதிகாரிகள் முதலில் பணியில் சேரும்போது அவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும். இதுபோக TA, DA மற்றும் HRA ஆண்டுதோறும் உயர்ந்துக்கொண்டே இருக்கும். வயது, அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்ப அதிகாரிகளின் ஊதியம் அதிகரிக்கப்படும். உதாரணமாக ஒரு அமைச்சரின் செயலாளர் பதவியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியின் அடிப்படை ஊதியம் சுமார் 2,50,000 வரை இருக்கும். மேலும் ஐஏஎஸ் அதிகாரியின் பதவிக்கு ஏற்ப தர ஊதியம் ரூ.5,400 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும்.
IPS அதிகாரிகளின் மாத சம்பளம் : ஐபிஎஸ் அதிகாரிகளை பொறுத்தவரை, முதலில் பணியில் சேரும்போது அடிப்படை ஊதியம் ரூ.56,100 வழங்கப்படும். மேலும் TA, DA மற்றும் HRA ஆகியவற்றை சேர்த்து மொத்தம் ரூ.67,320 வழங்கப்படும். இதேபோல ஐஆர்எஸ் அதிகாரிகளின் தொடக்க கால சம்பளமாக ரூ.56,100 வழங்கப்படும். அவர்களுக்கு அதிகபட்சம் ரூ.2,25,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
Read more ; மாதம் 5,000 முதலீடு.. கோடிகளில் ரிட்டன்.. குழந்தைகளுக்கான மிகச்சிறந்த சேமிப்பு திட்டம்..!!