முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மனைப்பிரிவு, கட்டுமான இடத்திற்கான அனுமதிக்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா..? ரூ.55,000 வரை நிர்ணயம்..!! வெளியான அறிவிப்பு..!!

It has been announced to pay Rs. 5 thousand each to get completion certificate from Tamil Nadu Real Estate Regulatory Authority.
07:55 AM Aug 08, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருந்து பணி நிறைவு சான்றிதழ் பெற தலா ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மனைப்பிரிவு, கட்டுமான இடத்திற்கான அனுமதிக்கு ஒரு சதுரமீட்டருக்கு ரூ.5 பதிவுக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடங்கள் 60 சதுரமீட்டருக்குள் இருந்தால், தளப்பரப்பு குறியீடு அளவுக்கு ஒரு சதுரமீட்டருக்கு 10 ரூபாயும், 60 சதுரமீட்டருக்கு மேல் இருந்தால், ஒரு சதுரமீட்டருக்கு 20 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகக் கட்டிடங்களைப் பொறுத்தவரை, தளப்பரப்பு குறியீடு அளவில் ஒரு சதுரமீட்டருக்கு 60 ரூபாயும், இதர கட்டிடங்களுக்கு 25 ரூபாயும் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். தடையில்லா சான்று பெற ஒவ்வொரு கோரிக்கைக்கும் தலா ரூ.2 ஆயிரமும், மனைப்பிரிவை பத்திரப்பதிவு செய்வதற்கு தடையில்லா சான்று பெற ஒவ்வொரு மனைக்கும் ரூ.2 ஆயிரமும் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்திடம் இருந்து பணி நிறைவு சான்றிதழ் பெற தலா ரூ.5 ஆயிரமும், கட்டுமானம், மனைப்பிரிவு திட்டத்தைப் பதிவு செய்த பின் திட்டத்தின் பெயர் மாற்றம், வங்கி மாற்றம் உள்ளிட்டவற்றிற்கு ரூ.5 ஆயிரமும், திட்டச்சான்று உண்மை நகல் பெற ஒவ்வொரு நகலுக்கும் தலா ரூ.2 ஆயிரமும், செயல்பாட்டுக்கான மனுவுக்கு ரூ.1,600 செலுத்த வேண்டும். முகவர் பதிவு காலாவதியாகும் நாளுக்கு ஒரு மாதம் முன்னர் பதிவை புதுப்பிக்க தனி நபர் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கு ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான பின் புதுப்பிக்க, தனி நபருக்கு ரூ.5,500, மற்றவர்களுக்கு ரூ.55,000. பதிவு நீட்டிப்புக்கு, முதல் நீட்டிப்புக்கு பதிவுக் கட்டணத்தில் 10%, இரண்டாவது நீட்டிப்புக்கு 20%, மூன்றாவது நீட்டிப்புக்கு 30%, 4-வது நீட்டிப்புக்கு 40 சதவீதம், ஐந்தாவது நீட்டிப்புக்கு 50% என ஒவ்வொரு நீட்டிப்புக்கும் 10 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவு காலாவதியாகும் நாளில் இருந்து மூன்று மாதம் முன்னரே நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால், கூடுதலாக 10% தொகை செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டண மாற்றம் கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Read More : விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Tags :
ஒழுங்குமுறை ஆணையம்தமிழ்நாடுரியல் எஸ்டேட்
Advertisement
Next Article