முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிக்பாஸ் ரஞ்சித் எத்தனை பெண்களை திருமணம் செய்திருக்கிறார் தெரியுமா..? இப்போது யாருடன் வாழ்கிறார்..?

Did you know that actor Ranjith, who is a contestant on Bigg Boss Season 8, has been married and divorced twice..?
05:23 PM Oct 12, 2024 IST | Chella
Advertisement

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகர் ரஞ்சித், இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் ரஞ்சித்தும் கலந்து கொண்டுள்ளார். மறுமலர்ச்சி படம் மூலம் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி பல்வேறு ஹிட் படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பீஷ்மர், கவுண்டம்பாளையம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.

நடிகர் ரஞ்சித் கடந்த 1999ஆம் ஆண்டு நடிகை பிரியா ராமனை திருமணம் செய்துகொண்டார். இவர், சூர்யவம்சம் படத்தில் நடிகர் சரத்குமாரின் முறைப்பெண்ணாக நடித்திருந்தார். இதுதவிர ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடித்திருப்பார். இதுதவிர ஜீன்ஸ் என்கிற நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கியிருந்தார். சினிமா மற்றும் சின்னத்திரையில் கலக்கிய இவர், நடிகர் ரஞ்சித்துடம் 15 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.

பிரியா ராமனை விவாகரத்து செய்து பிரிந்த கையோடு நடிகை ராகசுதா என்பவரை கடந்த 2014ஆம் ஆண்டே திருமணம் செய்துகொண்டார் ரஞ்சித். நடிகை ராகசுதா, நடிகை கே.ஆர்.விஜயாவின் சகோதரி கே.ஆர்.சாவித்ரியின் மகள் ஆவார். ராகசுதா உடனான ரஞ்சித்தின் திருமண வாழ்க்கையும் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. ஒரே ஆண்டில் இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, தனது முதல் மனைவி பிரியா ராமனுடனான விவாகரத்தை திரும்பப்பெற்று, அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அவரை பிக்பாஸுக்கு அனுப்பி வைத்ததே பிரியா ராமன் தானாம். தன் மனைவி மீதுள்ள பாசத்தை பிக்பாஸ் வீட்டிலேயே வெளிப்படுத்தியிருந்தார் ரஞ்சித்.

Read More : என்னப்பா சொல்றீங்க..? ரூ.200 நோட்டும் செல்லாதா..? திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி..!! உண்மை என்ன..?

Tags :
திருமணம்நடிகை பிரியா ராமன்பிக்பாஸ் ரஞ்சித்
Advertisement
Next Article