For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

5 நாட்களில் 'லப்பர் பந்து’ திரைப்படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..!!

The information about the collection of Labar Bandhu movie in 5 days worldwide has been released.
11:53 AM Sep 25, 2024 IST | Chella
5 நாட்களில்  லப்பர் பந்து’ திரைப்படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா    வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் பியார் பிரேமா காதல், பார்க்கிங் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர். அதேபோல், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அட்டகத்தி தினேஷ்.

Advertisement

தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து நடித்து கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தை தமிழரசன் பச்சமுத்து என்பவர் இயக்கி உள்ளார். இந்தப் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா, டி எஸ் கே, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் தான், லப்பர் பந்து திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ.7 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாக பார்க்கப்படுகிறது.

Read More : வெளிமாநில பெண்ணை வரவழைத்து அடிக்கடி உல்லாசம்..!! பணம் தராததால் அதிமுக நிர்வாகியை ஓட விட்ட பெண்..!!

Tags :
Advertisement