'அதிமுகவை காப்பாற்றுவேன் என கூறுவது எப்படி இருக்கு தெரியுமா’..? சசிகலாவை பங்கம் செய்த எடப்பாடி..!!
மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுகவில் சிலர் ஜாதி பார்ப்பதாக சசிகலா கூறிய புகாருக்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். மேலும், அதிமுகவை காப்பாற்றப் போவதாக சசிகலா கூறியதற்கு, இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுகவில் யாரும் ஜாதி பார்ப்பது இல்லை. ஏதாவது ஒரு குறை கூற வேண்டும் என்பதற்காக சசிகலா அதிமுகவை விமர்சிக்கிறார். ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. தற்போது திடீரென மீண்டும் என்ட்ரி என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கட்சியை காப்பாற்றுவேன் என சசிகலா கூறுவது, 3 ஆண்டு வேலைக்கு செல்லாமல், திடீரென வேலைக்கு செல்வது போல் உள்ளது” என்று விமர்சித்தார்.
”குறுவை சாகுபடி செய்த விவசாயிகளை காப்பீடு திட்டத்தில் இடம்பெற செய்ய வேண்டும். மேட்டூர் அணை திறக்காததால் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வறட்சி மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
Read More : இந்தியாவின் ஆன்டிபயாடிக் மருந்துக்கு தடை..!! கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் நடவடிக்கை..!!