'ஆண்களுக்கு கட்டாயம் 2 திருமணம்' இந்த விசித்திர கிராமம் பற்றி தெரியுமா?
உலகின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. அந்த வகையில், இந்திய கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த நிகழ்வும் அதற்கான காரணங்களும் விசித்திரம்தான். இந்த சிறிய கிராமத்தின் பெயர் தேராசர். இங்கு சுமார் 600 பேர் வசிக்கின்றனர். அந்த கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் குறைந்தது இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்த வழக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணத்தைத் தெரிந்துகொள்வது இன்னும் விசித்திரமாகவோ ஆச்சரியமாகவோ இருக்கும்.
இந்த தேராசர் கிராமத்தில் வசிப்பவர்கள் முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காது என்று நம்புகிறார்கள். குழந்தை பெற்றெடுக்க வேண்டுமானால், இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும். இந்த விசித்திரமான நம்பிக்கையால், இந்த கிராமத்து ஆண்கள் முதல் திருமணத்திற்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
அன்றிலிருந்து கிராமத்தில் இரண்டாவது திருமணம் செய்யும் வழக்கம் தொடங்கியதாகச் சொல்கிறார்கள். கல்யாணம் வேண்டாம் என்றால் ஊரை விட்டே துரத்தி விடுவார்களாம். அப்படிப்பட்ட இந்த கிராமம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த கிராமம் ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தது.
Read more ; 7ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர்..!! பள்ளியில் வைத்தே பலமுறை பலாத்காரம்..!!