முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தூங்கி எழுந்தவுடனே போன் பார்க்கும் பழக்கம் இருக்கா..? ஆபத்து இல்லையென மட்டும் நினைக்க வேண்டாம்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Are you the first person to check your phone after waking up? Do you know what the disadvantages are?
01:21 PM Jan 03, 2025 IST | Chella
Advertisement

தூங்கி எழுந்தவுடன் முதலில் போன் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? அதனால் ஏற்படும் தீமைகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

இன்றைய உலகில் போன் இன்றியமையாத பொருளாகி உள்ளது. எல்லா நேரமும், எல்லா இடத்திலும் செல்போன் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. மேலும், தூங்கி எழுந்தவுடன் முதலில் போன் பார்க்கும் பழக்கம் பலரிடமும் உருவாகி உள்ளது. இது பாதிப்பில்லாததாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஜலந்தரில் உள்ள மன்ஜீத் சைனி மருத்துவமனையின் MD மனநல மருத்துவர், நிபுணர் டாக்டர் ஷுப்கர்மன் சிங் சைனி இதுகுறித்து கூறுகையில், இந்தப் பழக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

இது NoMoPhobia (No Mobile Phobia) எனப்படும் நிலை என்று கூறுகிறார். அதாவது, மொபைல் ஃபோன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை ஆகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்துள்ளார்.

மன அழுத்தம்

மொபைலில் சமூக வலைதள நோட்டிபிகேஷனை பார்த்து உங்கள் நாளைத் தொடங்குவது அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கலாம். இந்த மன அழுத்தம் கார்டிசோல் அளவுகள் மற்றும் அதிக இதயத் துடிப்பு, மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.

தூக்கமின்மை

ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட், தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலடோனின் என்ற ஹார்மோனின் உடலின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுத்தும். எழுந்த உடனே நீல ஒளியில் உங்களை வெளிப்படுத்துவது உங்கள் சர்க்காடியன் ரிதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். இது நாள் முழுவதும் உங்கள் சோர்வுக்கு வழிவகுத்து அடுத்த இரவில் தூங்குவதை கடினமாக்குகிறது.

கவனச் சிதறல்

காலையில் எழுந்தவுடன் உங்கள் மொபைலைச் பார்ப்பது தியானம், உடற்பயிற்சி அல்லது ஆரோக்கியமான காலை வேலைகளை மறக்கடிக்க செய்யும். அதிக உற்பத்தி மற்றும் அர்த்தமுள்ள செயல்களில் இருந்து உங்களைத் திசை திருப்பும். இப்பழக்கம் நாள் முழுவதும் உங்கள் கவனத்தைத் தடுக்கலாம். இது கல்வி மற்றும் தொழில்முறைகளில் கவனச் சிதறல்கள் ஏற்படலாம்.

Read More : எங்கள் கொள்கை தலைவிக்கு இன்று பிறந்தநாள்..!! வேலுநாச்சியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய விஜய்..!!

Tags :
கவனச் சிதறல்செல்போன்தூக்கமின்மைமன அழுத்தம்
Advertisement
Next Article