உங்ககிட்ட DigiLocker செயலி இருக்கா..? அதிரடியாக வந்த மாற்றம்..!! அது என்ன UMANG..? உடனே இதை பண்ணுங்க..!!
பெரும்பாலான இந்திய மக்களின் ஸ்மார்ட்போனில் நிச்சயம் டிஜிலாக்கர் மொபைல் ஆப்ஸை (DigiLocker Mobile Apps) நம்மால் பார்க்க முடியும். அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த அனைத்து வகையான அதிகாரப்பூர்வ சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரமாக பாதுகாப்புடன் பயன்படுத்த இது டிஜிலாக்கர் பயன்படுகிறது.
இந்நிலையில் தான், தேசிய மின் ஆளுமைப் பிரிவு (NeGD) சமீபத்தில் UMANG செயலியை DigiLocker உடன் இணைத்துள்ளது. டிஜிலாக்கர் இந்தியாவின் டிஜிட்டல் வாலட்டுடன் UMANG செயலியை அதிகாரப்பூர்வமாக ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது. முன்பை விட, பொதுமக்களுக்கு இனி DigiLocker அதிக வசதியை வழங்கும் மற்றும் பயனர்கள் ஒரே தளத்தின் மூலம் பல சேவைகளை நிர்வகிக்க இந்த புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதாக NeGD தெரிவித்துள்ளது.
UMANG உடன் ஒருங்கிணைப்பதன் மூலம், பயணத்தின்போது அணுகக்கூடிய சேவைகளின் வரம்பை DigiLocker விரிவுபடுத்தியுள்ளது. UMANG அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கிறது. இது iOS க்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப்போது, சில எளிய வழிமுறைகளுடன் இந்த சேவைகளை DigiLocker பயன்பாட்டின் மூலமாகவும் மக்கள் அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சேவையைப் பயன்படுத்த கீழ்கண்ட வழிமுறையை பின்பற்ற வேண்டும்...
* உங்கள் DigiLocker பயன்பாட்டை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
* DigiLocker செயலியில் உள்ள UMANG ஐகானைக் கிளிக் செய்யவும்.
* கேட்கும் போது, UMANG பயன்பாட்டை இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.
* DigiLocker பயன்பாட்டில் பல்வேறு அரசாங்க சேவைகளை அணுகலாம்.
Read More : ’எல்லாம் நாடகம்’..!! ’மாணவர்களின் உயிர் தான் போகுது’..!! நீட் விவகாரத்தில் சீறிப்பாய்ந்த எடப்பாடி..!!