உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா..? பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு..!! உடனே இதை பண்ணுங்க..!!
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது உடலில் உள்ள ரத்த நாளங்களில் அழற்சி ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றன. நீரிழிவு நோயாளிகளுடன் மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பு 2 மடங்கு அதிகம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கூட 2 நிமிடத்திற்கு ஒருவர் பக்கவாத நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு கீழ்க்கண்ட காரணங்களால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு
1. நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது உடலில் உள்ள ரத்த நாளங்களில் அழற்சி ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றன. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.
2. பாதிப்படைந்த ரத்த நாளங்களில், தமனிக்குழ்மைத்தடிப்பு (அதிரோஸ்கிலோரிடக்பிளேக்) ஏற்பட்டு ரத்த நாளங்களில் அடைப்பு உருவாகிறது. இது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை குறைத்து பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.
3. பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இருதய நோய், அதிக கொலஸ்டரால், சிறுநீரக பாதிப்பு, ரத்தகொதிப்பு, உடல்பருமன் போன்றவையும் இருப்பதால் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பக்கவாதம் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்.
1. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
2. ரத்தத்தில் கொலஸ்டரால் மற்றும் ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
3. புகைபிடித்தல் மற்றும் மதுப் பழக்கத்தை கைவிட வேண்டும்.
4. உடல் எடையை குறைக்க வேண்டும்.
5. தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும்.
Read More : விவசாயிகளே..!! ஆடுகளை வைத்து இப்படியும் லட்சங்களை சம்பாதிக்கலாம்..!! சூப்பர் ஐடியா..!!