முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா..? ரொம்ப ஆபத்து.. இதனால் வரும் பிரச்சனைகள் என்னனு தெரிஞ்சுக்கோங்க..

Do you have a habit of urinating while taking a bath?
03:29 PM Dec 12, 2024 IST | Mari Thangam
Advertisement

ரிலாக்ஸாக ஒரு நாள் குளித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படும். அப்படி ஏற்படுகையில், தனியாக சென்று சிறுநீர் கழிப்பதற்கு பதிலாக அப்படியே கழித்துவிடுவோம். இது நல்ல பழக்கமா? இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? இந்த பதிவில் பார்க்கலாம்..

Advertisement

குளிக்கும்போது தண்ணீர் சலசலக்கும் சத்தத்துடன் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை உடல் கடிகாரம் மறக்காது. அது, தண்ணீர் சத்தம் கேட்டாலே சிறுநீர் கழிக்கத் தூண்டும். ஆனால் இப்படி செய்வதால் உங்கள் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சிறுநீரில் பாக்டீரியாக்கள் நிறைய இருப்பதால் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. குளிக்கும்போது தொடர்ந்து சிறுநீர் கழிப்பது மோசமான சிறுநீர்ப்பை பழக்கங்களை ஏற்படுத்தும் என்றும், இதனால் உங்களின் சில பழக்கவழக்கங்களும் மோசமாகலாம்.   

சிறுநீர் கழித்தால், குளிக்கும் பகுதியிலும் கிருமிகள் படிந்துவிடும். குளிக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் தொற்றுகள் அபாயம் அதிகரிக்கும். குளிப்பதற்கு முன்பே சிறுநீர் கழிப்பது நல்லது என்று சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எப்போதாவது அவசரத்தில் குளிக்கும் போது சிறுநீர் கழிப்பதில் தவறில்லை என்றும் கூறுகின்றனர். குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது பெரிய அளவில் எந்த ஒரு உடல்நல பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்றாலும், மற்றவர்கள் குளிக்கும் போது அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்க இப்படி செய்வதை தவிர்ப்பது நல்லது.

Read more ; 74 வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர்… பாக்ஸ் ஆஃபிஸ் கிங்.. ரஜினிகாந்த் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்..!

Tags :
BathExpects AdvicePeeingshowerUrine
Advertisement
Next Article